(முழு)-முழை = குகை. முழைத்தல் = துளைத்தல்.
முழை-மூழை = அகப்பை.
முழுகு-முழுங்கு-முங்கு. முழுங்கு - விழுங்கு.
விழுங்குதல் = வாய்க்குள் முழுக்குதல்.
முள் - மொள் - மொண்டை-மொந்தை.
மொண்டை - மண்டை. மொள்ளுதல் =
நீர்ப்பொருளுக்குள் முழுக்கி யெடுத்தல்.
8. துருவுதல்
உள்-உரு - உருவு. உருவுதல் = கைக்குள் ஒன்று
துருவுமாறு இழுத்தல்.
குள்-(குரு)-கோர்-கோ. கோர்வை-கோவை.
கோர்த்தல் = நூல் ஊசிக் காதிலும்
பாசித் துளையிலும் துருவச் செய்தல்.
சுள்-சுரு. சுருங்கை = நிலத்தின்கீழ்த்
துருவிச் செல்லும் வழி.
சுரு-சுருவு-சுருவம் = உணவுக் கலத்துள் துருவும்
அகப்பை.
துள்-துரு-துருவு. துரு-தூர் - தூர்தல் = ஊடு
செல்லுதல், வாசலுட் புகுதல். வீட்டிற்குள் புகுதலைத்
தூர்தல் என்பது வடார்க்காட்டு வழக்கு.
தூர்-தூரி = நீர்துருவிச் செல்லும்
மீன்பொறி.
தூர்-தோர் - தோரணம் = தெருவூடு கட்டும்
அழகுத் தொங்கல்.
தோர்-தோரணை=கோர்வை.
புள்-புழு-புகு-புகுது-புகுரு-பூர். பூர்தல் =
உட்புகுதல்.
பூர்-பூரான் = மண்ணிற்குள் புகும்
நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் =
உருவத்துளைத்தல். மூக்குப்பூறி-மூக்குப்பீறி. பூறு-
பீறு.
முல்-மூலம்=வாயில் (means).
3. தமிழ் வளர்ச்சி
i உரைநடை
கிளவியாக்கம்
1. சொற்றிரிவு முறைகள்
கிளவி என்பது நால்வகை இலக்கணவியற்
சொல்லிற்கும் பொதுவான சொல்.
கிளத்தல்-சொல்லுதல். கிளப்பது கிளவி.
|