ஈகார ஊகாரச் சுட்டீறுகள் இக்காலத்து
இறந்துபட்டன. அவற்றின் குறில் வடிவுகளே இன்று
வழங்குவன.
எ-டு: அ-உண,
நில, விள, இர, (செ.வ.).
இ-கண்ணி, கிளி, நரி, புலி, உறுமி, கொடி,
வெள்ளி.
உ-கொழு (கலப்பைக் காறு),
கரு (சூல்), உருமு, வரகு.
சில அகரவீறு அவு என்று திரியும்.
எ-டு: குழ-குழவு, மழ-மழவு.
சுட்டடியீறுகள்
எல்லா மெய்களுள்ளும் இயல்பானதும்
எளிதானதும் மகரமாதலின், முதலாவது தோன்றிய
சுட்டடியீறு மகரமெய் யீற்றதே. அது பின்னர்ப் பிற
மெய்யீற்றதாகத் திரிந்தும், இறுதியிலும்
இடையிலும் வேறெழுத்துப் பெற்று விரிந்தும், ஏனை
யீறுகளோடு கூடியும், பல்வேறு தனியீறுகளையும்
கூட்டீறுகளையும் பிறப்பித் துள்ளது.
‘அம்‘ இக்காலத்தில் தனியீறு;
முதற்காலத்தில் கூட்டீறு (அ+ம்).
அம்-அன்-அல். எ-டு:
திறம்-திறன்-திறல்.
உயிரும் உயிர்மெய்யுமாகிய
ஈறுகளெல்லாம் சொற்களும் சொற் சிதைவுகளுமே
யாதலின், அத்தகை ஈறு பெற்ற சொல் லெல்லாம்
முதற் காலத்தில் இரு சொல்லாகவே
கொள்ளப்பட்டன.
எ-டு: உணா
(உண்+ஆ) = உண்ணும் அது, உண்ணும் பொருள்.
மெய்யீற்று முச்சுட்டடி யீறுகள்
எ-டு:
ஆம் -
ஈம் -
ஊம் -
அம் - இம் -
உம் - |
குழாம்
------
------
மரம்
------
உரும் |
ஆன் -
ஈன்
-
ஊன்
-
அன் -
இன்
- உன் - |
வயான்
-------
-------
அழன்
வெரிந்
பொருந் |
ஆல் -
ஈல்
-
ஊல்
-
அல் -
இல் -
உல் - |
வரால்
------
-------
குழல்
அணில்
------ |
எடுத்துக்காட்டில்லன இறந்துபட்டன.
முதற்காலத்தில், தமிழில் றன்னகரம்
தோன்றவில்லை; தந்நகரமே யிருந்தது.
அக்காலத்துச் சொற்களே வெரிந், பொருந் என்பவை.
இது பின்னர் நெடுங்கணக்கில் விளக்கப் பெறும்.
|