"நெட்டெழுத் தேழே ஓரேழுத்
தொருமொழி." (43)
"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை
பிலவே" (44)
என்று அதை ஒருமருங்கு மறுத்திருப்பதும்.
வினா வெழுத்துகளைக் குறிக்குமிடத்து,’
"ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ" (32)
என எகரத்தை விட்டிருப்பதும்,
தொல்காப்பியம் நெடுகலும் "ஆயிடை" என்னும்
தொடரே பயின்று வருவதும், ஆண்டு ஈண்டு என்னும்
சொற்கட்குக் குறுகிய வடிவின்மையும், ஏகார
ஓகாரங்கட்கு இனக்குறில்
பிந்தித் தோன்றியுள்ளமையும், இதற்குச்
சான்றுகளாகும்.
சுட்டீறுகள்
ஆ-உணா, நிலா, இரா, விளா, களா, நுணா,
கடா, மிழா.
ஈ-குரீ (குரீஇ = குருவி).
ஊ-கொள்-கொளும்-கொளுமூ-கொண்மூ(முகில்).
சிறு பறவை (குருவி) என்று பொருள்படும்
குரீ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் குரீஇ என
அளபெடையாக்கி விட்டனர்.
கொண்மூ= கடல்நீரைக் கொள்ளும்
முகில். கொள்ளுதல்= முகத்தல். கொளுமுதல் =
முகத்தல். இதன் விளக்கத்தைச் "சொற் படை
வளர்ச்சி" என்னும் தலைப்பின்கீழ்க் காண்க.
ஆவீறு முறையே அ, எனத் திரியும்.
எ-டு: நிலா-நிலவு. இரா-இர-இரவு, களா-களவு.
அவு ஈறு ‘அவம்‘ என்றும் திரியும்.
எ-டு: அரா-அர-அரவு-அரவம்.
களா-கள-களவு-களவம்.
முதற்காலத்தில் நெடிலாகவே யிருந்த
முச்சுட்டுகளும் பிற்காலத்தில் குறிலாகவும் மாறின.
எ-டு: ஆ-அ,
ஆது-அது, ஆங்கு-அங்கு.
ஈ-இ, ஈது-இது, ஈங்கு-இங்கு
ஊ-உ, (ஊது)-உது, ஊங்கு-உங்கு.
எழுத்துகள் தனிநிலையின்றிப்
புணர்நிலைப்பட்டுச் சொற் களாகும்போது, நெடில்
வடிவினுங் குறில்வடிவே பலுக்க (உச்சரிக்க)
எளிதாம்.
|