பக்கம் எண் :

76தமிழ் வரலாறு

ன-ஞ :
ன-ந :
ன-ல :
ன-ற :
ன-ண :
அன்னை-அஞ்ஞை, முன்னை-முஞ்ஞை.
பொருகின்றார்-(பொருன்னார்)-பொருநர்.
செய்வென்-செய்வன்-செய்வல்.
மன்-மறு, தென்னு-தெற்று.
பட்டனம்-பட்டணம்.

சில இணைமெய்களும் வேறிணையாகத் திரியும்.

எ-டு: ங்க-ஞ்ச: பொங்கு-பொஞ்சு.

ண்ட-ந்த: மொண்டை-மொந்தை

ன்ற-ந்த: மன்று-மந்து, பின்று-பிந்து.

(6) பல்வகை ஈறுகள்

பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டு மென்பது, சொல்லாக்க அடிப்படை நெறிமுறை. அல்லாக்கால், பொருள் அதுவோ இதுவோ என மயங்க நேரும். மண் என்னுஞ் சொல் மணலைக் குறித்தற்கு அல்லீறு பெற்று மணல் என்றானமையும், கம்பு என்னுஞ் சொல், மரக்கோலைக் குறியாது கனிய (உலோக)க் கோலைக் குறித்தற்கு இகர வீறு பெற்றுக் கம்பியென் றானமையும் காண்க. பக்கத்தையும் இடுப்பையும் குறிக்கும் மருங்கு என்னும் சொல், மருங்குல் என உல்லீறு பெற்றே தனிப்பட இடுப்பைக் குறித்தது.

முதன் முதலாகத் தோன்றிய ஈறுகள், சுட்டுகளும் சுட்டடிச் சொற்களுமாகவே யிருந்திருக்கின்றன. சுட்டெழுத்துகள், முதற் காலத்தில் பெயரெச்சமாக மட்டுமன்றிப் பெயராகவும் இருந் திருக்கின்றன.

எ-டு: ஆ=அது(பெ.), அந்த (பெ.எ.). இக்காலத்தும் அதுபோது என்று, சுட்டுப்பெயர் பெயரெச்சமாய் வழங்குதல் காண்க.

உயிரொலிகளைத் தனித்தொலிக்கும்போது, குறிலினும் நெடிலே இளஞ்சிறார்க்கும் முந்தியல் மாந்தர்க்கும் எளிதாம். குறிலை விட்டொலிக்கும்போது மூச்சுப்பை முயற்சி மிக்குவேண்டி யிருத்தலின், கீழ்வகுப்பு மாணவர் குறில் நெடில் வேறுபாடின்றியே உயிரெழுத்துகளை ஒலித்துப் போதல் காண்க. இதனால் உயிரெழுத் துகள் முதலில் நெடிலாகவே தோன்றியிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படும்.

"அ இ உஅம் மூன்றுஞ் சுட்டு" (31)

என்று கூறிய தொல்காப்பியனார், சற்றுப் பின்பு,