|
அறியப்படும். கடைக்கழகக் காலத்தில்,
"குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத்
துலகாண்ட சேரலாதன்"1
ஆட்சியும், "ஆரிய நாட்டரசோட்டி அவர்
முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்தகொள்கையிற்
கங்கைப்பேர் யாற்றிருந்து நங்கை தன்னை
நீர்ப்படுத்தி"1
வந்த செங்குட்டுவன் செயலும், தலைக்கழக
இடைக்கழகப் பாண்டியரின் பேரரைய வாற்றலைப்
பெரிதும் வலியுறுத்தும்.
(4) குமரிக்கண்டத் தமிழ்நாடுகள்
"தொடியோள் பௌவம்"2
என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு
அடியார்க்குநல்லார் உரைத்துள்ள விரிவுரையாவது:
"தொடியோள்"2
பெண்பாற்பெயராற் குமரியென்பதாயிற்று, ஆகவே,
தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம்....
முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத்
தலைச்சங்கத்து.... நாலாயிரத்து நானூற்று
நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும்
முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும்
உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து
நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார், காய்சினவழுதி
முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத்
தொன்பதின்மர்....அக்காலத்து, அவர் நாட்டுத்
தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி
யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும்
இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின்
நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும்,
ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை
நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த
நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்லம்
முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்
தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல்
கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா
ரென்று ணர்க..." என்பது.
பண்டைத் தமிழிலக்கியத்திற்
சொல்லப்பட்டுள்ள கடல் கோள்கள் மொத்தம்
நான்கு. அவற்றுள், முதலது தலைக்கழக இருக்கையாகிய
தென்மதுரையைக் கொண்டது; இரண்டாவது
"நாகநன்னாடு நானூறியோசனை" கொண்டது(மணிமே.
9:21); மூன்றாவது இடைக்கழக இருக்கையாகிய கபாட
புரத்தைக் கொண்டது; நான்காவது
காவிரிப்பூம்பட்டினத்தையும் குமரியாற் றையுங்
கொண்டது. குமரி என்பது, குமரிக் கண்டத்தின் தென்
கோடியடுத்திருந்த ஒரு பெருமலைத் தொடர்க்கும்,
அதன்
1. சிலப்: வாழ்த்துக்காதை,
உரைப்பாட்டுமடை
2. சிலப். 8: 1
|