(16) ஒப்புமை யமைப்பு (Analogy)
ஒரு சொல்லின் எதுகை வடிவில் இன்னொரு
சொல்லை அமைப்பது ஒப்புமை யமைப்பாம்.
எதிர்மறைச் சொற்கள்
இயற்கை என்னும் சொல்லமைப்பைப்
பின்பற்றி, செயல் என்னும் தொழிற்பெயரோடு
"கை" யீறு சேர்த்துச் செயற்கை என்றமைத்தது
ஒப்புமை யமைப்பே. ஏனை யெடுத்துக்காட்டுகள் வருமாறு:
அறம், மறம்; இறப்பு, பிறப்பு; இதை
(புதுக்கொல்லை), முதை (பழங்கொல்லை); இணங்கு,
பிணங்கு; இன்பு(இன்பம்), துன்பு (துன்பம்); குற்றம்,
நற்றம்; சிறு, பெரு; சிற்று, பெற்று (பெரியது);
சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய; தாய், சேய்;
தெருள், மருள்; நலம், பொலம்; நன்செய், புன்செய்;
நாடு, காடு; பேரடி, சீறடி; நாட்டம், பாட்டம்; முந்து,
பிந்து.
இனப்பொருட் சொற்கள்
நாற்றிசைக் காற்றுப்பெயர்களுள்,
வாடை கோடை என்பவும் கொண்டல் தென்றல்
என்பவும் ஒப்புமை யமைப்பாம்.
ஒருபொருட் சொற்கள்
கொற்றம், வெற்றம்.
தொடர்பற்ற சொற்கள்
விடை-விடலை, கடை-கடலை,
தொடை-தொடலை, முடை-முடலை; ஐ-(ஐந்து) அஞ்சு, பை-பஞ்சு,
மை-மஞ்சு, நை-நஞ்சு.
(17) நானிலக் கருப்பொருட் சொற்கள்
நிலைத்திணை (தாவரம்), இயங்குதிணை
(சங்கமம்) என்னும் இருவகுப்புயிரிகளுள், சிலபல
ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக உரியனவாகும்.
முந்தியல் தமிழர் குறிஞ்சிநிலத்தில்
வாழ்ந்திருந்த போதே, மூவிடச் சுட்டுப் பெயர்,
வினாப் பெயர், முறைப்பெயர், வண்ணமும் வடிவும்
அளவும் சுவையும் ஊறும்பற்றிய குணப் பெயர்,
இன்றியமையாத வினைச் சொற்கள் முதலிய
அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் அமைந்து விட்டன.
பயிர் பச்சை, விலங்கு பறவை, உணவு வகை,
தொழில்முறை, கருவிபடைக்கலம், பழக்க வழக்கம்,
கொள்கை கோட்பாடு, குடியிருப்பிடம் முதலிய
பல்வேறு கருப் பொருள்கள்பற்றிய சொற்களும்
தோன்றிவிட்டன, அதன்பின்
|