பக்கம் எண் :

10தமிழ் வரலாறு

ஏ இது வினா, பிரிநிலை, தேற்றம், இணைப்பு, இசை நிறை, ஈற்றசை, விளி முதலிய பலபொருள்களை உணர்த்தும்.

ஏரோது அரசன் காலத்திலே, யூதேயா நாட்டிலே, பெத்த லகேம் என்னும் சிற்றூரிலே, ஒரு மாட்டுத் தொழுவத்திலே, இயேசு பெருமான் பிறந்தார். இதில் இசைநிறை வந்தமை காண்க.

ஓ இரு வினா, எதிர்மறை, பிரிநிலை, மறுநிலை, ஐயம், இரக்கம், வியப்பு, இழிவு, ஒழியிசை, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும்.

(5) பல்வகை இலக்கண வீறுகள்

தன்மைப்பெயரீறுகள்

ஒருமை : ஒன்-ன்
பன்மை : உம்-ம், ம்(உம்)+கள்

முன்னிலைப்பெயரீறுகள்

ஒருமை: ஒன்-ன்,(நீன்-நீ)
பன்மை: உம்-ம், ம்(உம்)+கள்
(நீ+இர்=நீயிர்-நீவிர், நீர்)

படர்க்கைப்பெயரீறுகள்

ஆண்பாலீறுகள்:

ஆள் என்னும் உயர்திணைச்சொல், ஆள்கிறவன் என்னும் கருத்தில் ஆண்பாலையும், ஆளப்படுகிறவள் என்னும் கருத்தில் பெண்பாலையும் உணர்த்தும்.

ஆண்பாலை யுணர்த்தும் இடங்கள்:

1. ஆடவன் "நல்லா ளிலாத குடி" (குறள். 1030)

2. திறவோன். "ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும்"(திரிகடு. 7)

3. போர்மறவன் "பிணம்பிறங்க ஆளெறிந்து" (பு.வெ. 2:7)

4. காலாள். "ஆள்வெள்ளம் போகவும்" (பு.வெ. 7:13)

5. கணவன். "ஆளில்லா மங்கைக் கழகு" (வாக்குண்டாம்,3)

ஆளன்= 1. ஆள்பவன்

2. கணவன். "ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது."