3
சிதைநிலைப் படலம்
(தோரா. கி. மு. 1500-இன்றுவரை)
1. இடைக்கழக அழிவும்
இடைநிலைக்காலமும் (தோரா. கி.மு. 1500-600)
சில்லாயிரம் ஆண்டுகளிருந்தபின்,
இடைக்கழக இருக்கை யாகிய கதவபுரமும் (?) கடலுள்
மூழ்கியது.
இடைக்கழகத்தைப் புரந்த பாண்டியரும்,
அக் கழகத்திறுதியி லிருந்த புலவரும்
ஐம்பத்தொன்பதின்மர் என இறையனார் அகப்
பொருளுரை கூறும். இசைநுணுக்கம், கலி, வியாழமாலை
யகவல், வெண்டாளி முதலிய நூல்கள்
இடைக்கழகத்தால் இயற்றப்பெற்றன வாகச்
சொல்லப்பெறும்.
இடைக்கழகத்திருந்த நூல்கள்
எண்ணாயிரத்தெச்சமென்று, ஒரு செவிமரபுச் செய்தி
வழங்கிவருகின்றது.
2. வேத ஆரியர் நாவலம் (இந்தியா) வருகை
(தோரா. கி.மு. 2000 - 1500)
வடநாவலத்தினின்று படிப்படியாக
வடமேற்கிற் சென்று, மேலையாசியா வழியாகவும்
வடஆப்பிரிக்கா வழியாகவும் ஐரோப்பாவிற்குட்
புகுந்து, காண்டினேவியத்தை முட்டித் திரும்பிக்
கிரேக்கநாடு வரை பரவி ஆரியராக மாறின இனத்தின்
ஒரு கிளை, கிரேக்கத்திற்கும்
பழம்பாரசீகத்திற்கும் இடைப்பட்ட ஒரு
மொழியைப் பேசிக்கொண்டு முல்லை நாகரிக
நிலையில், இடைக் கழக அழிவையடுத்து
இந்தியாவிற்குட் புகுந்தது. அக்கிளையினர்க்கு
அன்று எழுத்துமில்லை; இலக்கியமு மில்லை. அவர்
பல்வேறு சிறுதெய்வ வழிபாட்டினராயும் வேள்விமதத்
தினராயும் பல்லூனுண்ணிகளாயும் இருந்தனர்.
3. வேதக்காலம் (தோரா. 1500-1000)
இந்திய ஆரியர் சிந்துவெளியிற்
பரவியபின், பல்வேறு சிறு தெய்வ வழுத்துத்
திரட்டாகிய இருக்குவேதம் இயற்றப்பெற்றது. எகர
ஒகரக் குறில் இல்லாததும் தென்சொல் விரவியதுமான
வேதமொழி, வேத ஆரியரின் சிறுபான்மையையும்,
முன்னோர் மொழி மறப்பையும், பிராகிருதம்
என்னும் வடதிரவிட மொழிகளின் செல்வாக்கையும்,
ஒருங்கே உணர்த்தும்.
|