கம், துளுவம்,
கன்னடம், தெலுங்கு, கோலாமி, நாய்க்கீ. பரிசி
(பர்ஜி), கடபம், கோண்டீ. கொண்டா, கூய், குவீ,
குருக்கு, மாலத்தோ, பிராகுவீ எனப் பதினெட்டாகக்
கணக்கிட்டுள்ளனர்.
திரவிடமொழிகள், பொதுவாக,
வடக்கே
செல்லச்செல்லத் திரிந்தும் சிதைந்தும்
குன்றியும், தெற்கே வரவரத் திருந்தியும்
விரிந்தும் இலக்கியங்கொண்டும் இருக்கும்.
மலையாளம் தென்னாட்டுமொழியும் பழஞ்
சேரநாட்டுத் தமிழின் திரிபுமாயினும், துஞ்சத்து
எழுத்தச்சனின் அடிமைத் தனத்தால், பிற
திரவிடமொழிகளினும் மிகுதியாகவும் அளவிறந்தும்
ஆரிய வண்ணமாக்கப்பட்டது.
|