பக்கம் எண் :

98தமிழ் வரலாறு

வடமொழியிலும் திரிந்து ஆயிரக்கணக்கான சொற்களைத் தோற்று வித்துள்ளது. தமிழ்க்கூறு ஆரியச் சொல்லமைப்பிற் கலந்துள்ள தென்பதற்கு, இஃதொன்றே போதிய சான்றாம்.

தமிழைத் தலைகீழாய் வைத்தாய்ந்த கால்டுவெலாரும், ஆரியத்திற்கும் திரவிடத்திற்குமுள்ள தொடர்பை அல்லது ஒப்புமையை பின்வருமாறு குறித்துள்ளார் :

(1) கிரேக்கமொழியிலும் திரவிடத்திலும் னகரம் உடம்படு மெய்யாக வருகின்றது.

(2) ஈரின மொழிகளிலும் படர்க்கைப் பகரப் பெயர்களும் வினைகளும் பாலீறேற்கின்றன.

(3) படர்க்கை யொருமைச் சுட்டுப்பெயர் அல்லது ஒன்றன் பாற்பெயர், ஈரினத்திலும் தகரவீறு(d or t) கொண்டுள்ளது.

(4) இலத்தீனிற் போன்று தமிழிற் பலவின்பா லீறு அகரமாகும்.

(5) ஈரினத்திலும் அகரம் சேய்மையையும் இகரம் அண்மையையும் சுட்டும்.

(6) பாரசீகத்திலும் திரவிடத்திலும் தகர இடைநிலை இறந்த காலங் காட்டும்.

(7) முதனிலைமெய் இரட்டித்து இறந்தகாலங் காட்டுவது ஈரினத்திலு முண்டு.

(8) ஈரினத்திலும் பல வினைகள் முதனிலை நீண்டு தொழிற் பெயராகின்றன.

இற்றைத் திரவிடமொழிகள்

தமிழினின்று திரிந்துள்ள திரவிடமொழிகள், பின்வருமாறு பன்னிரண்டெனச் சென்ற நூற்றாண்டிற் குறித்தார் கால்டுவெல்.

திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள்
1. மலையாளம்
2. தெலுங்கு
3. கன்னடம்
4. துளு (துளுவம்)
5. குடகு( குடகம்)
1. துடவம்
2. கோத்தம்
3. கோண்டி
4. கொண்டா அல்லது கூ
5. ஓராஒன்
6. இராசமகால் அல்லது மாலெர்
7. பிராகுவீ

இந் நூற்றாண்டில், பேரா. பரோவும் பேரா. எமனோவும் இற்றைத் திரவிட மொழிகள் மலையாளம், கோத்தம், துடவம், குட