எல்லாம்-OE.
eall, all, E.all, ஏர்-AS.
ear (to plough), தாங்கல் (ஏரி)-tank,
பார்(கம்பி)-bar,
மெது-OE. smoth, E. smooth,புகை-OE.
smoca, E. smoke, மைந்து-OE.
miht, OS., OHG. maht, Goth. mahts.
படி (உடம்பு)-OE.
bodig, E. body, குரல்-ME.
crawe, E. craw, MDu, craghe, MLG. krage (neck, throat),
புதல் (அரும்பு)-ME budde,
boddle E. bud.
அல்-அன் (எதிர்மறை முன்னொட்டும்
இடைநிலையும்)-un,
இல் (மனை, 7ஆம் வே. உ.)-inn,
in. இல் (எதிர்மறை முன்னொட்டும்
இடைநிலையும்)-in,
அண் (மேல்)-on,
உம்பர்-up, upper, over,
துருவ-through.
அஃகு-ock (dim,
suf.), இட்டு-et,
ete, ette (dim. suf.) ஏர்-er(comp.
suf) எட்டு-est
(sup. suf.)
15. சொன்மாற்றத் தொலைவுக்கணிப்பு (Glotto-telemetry)
ஆரியத்திற்கும் தமிழுக்கும்
(திரவிடத்திற்கும்) சில சொற்கள் தாம்
பொதுவாயிருக்கின்றன வென்றும், அவ் விரு
குடும்பமொழி கட்கும் வேறு யாதொரு தொடர்புமில்லை
யென்றும். பலர் கருது கின்றனர். பல
திரவிடச்சொற்கள் ஆரியத்தாற் கடன்மட்டும்
கொள் ளப்பட்டனவேயன்றி, திரவிடக் கூறுகள் ஆரிய
மொழியமைப் பிற்குட் புகவில்லையென்று, பேரா.
பரோ தம் "சமற்கிருத மொழி" (The
Sanskrit Language) என்னும் நூலிற்
கூறியுள்ளார். இது தென்மொழி வடமொழித்
தொடர்பைத் தலைகீழாக வைத்து ஆய்ந்ததன்
விளைவாகும்.
ஒரு பெருந் தாய்மொழி இயற்கையாகப்
பரவும்போது, ஆயிரங்கல் தொலைவிற்கொருமுறை அதன்
பழஞ்சொற் றொகுதியில் ஏறத்தாழ மூன்றிலொரு
பங்கை இழக்கின்றது. அதோடு புதுச்சொற்களும் புதிய
சொல்லமைதியிலக்கண வமைதிக ளும் புகுகின்றன. இவ்
வுண்மையை அடிப்படையாக வைத்து, ஒரு மொழி தன்
மூலமொழியினின்று எவ்வளவு தொலைவு விலகியுள்ள
தென்றோ, எத்துணைத் திரிந்துள்ளதென்றோ
கணிக்கவியலும். இதுவே சொன்மாற்றத் தொலைவுக்
கணிப்பாம்.
ஐரோப்பிய ஆரியமொழிகள்
தமிழினின்று பேரளவு திரிந்துள்ளதற்கு அவை
விலகிச் சென்றுள்ள சேய்மை அளவே கரணியமாம்.
ஆயினும், இன்றும் அவற்றின் முன்னொட்டுகளும்
பின்னொட்டுகளும் பெரும்பாலும் தமிழ்ச்
சொற்களாகவே யுள்ளன.
எ-டு: கும்-கும்மல்-L.
cmumulus, கும்-L.
cum.
இக் கும் என்னும் சொல்லே, com,
con, col, cor, co என்று ஆங்கிலத்திலும், sym,
syn, syl என்று கிரேக்கத்திலும், ஸம்
என்று
|