பக்கம் எண் :

96 தமிழ் வரலாறு

ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பிய மொழிகளுள், வடமேற் கோடியில் வழங்கிவரும் தியூத்தானிய (Teutonic) மொழிகள் சிறப்பாக ஆங்கில சாகசனியம் (Anglo-Saxon), தமிழுக்கு மிக நெருங்கி யிருக்கின்றன. அந் நெருக்கத்தைக் காட்டும் சான்றுகள் வருமாறு:

(1) விழுத்தம் பெரும்பாலும் முதலசைவில் விழுதல்.

(2) தனிக்குறிலை யடுத்த மெய் உயிரொடு புணரின் இரட்டல்.

(3) இருமையெண் இன்மை.

(4) வினைகள் துவ்வீறொத்த ஈற்றால் இறந்நதகாலங் காட்டல். எ-டு: walker, told, burnt

(5) திய்யொத்த முன்னிலை யொருமையீறு பண்டையாங்கில வழக்கிலிருந்தமை.

எ-டு; நீ யிருத்தி - Thou art

(6) சில அடிப்படைச் சொற்கள் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் பொதுவாயிருத்தல்.

(7) ஆரியத்திலுள்ள தமிழ்சொற்களைப் பொதுவாக ஆங்கிலமே தமிழுக்கு நெருங்கிய வடிவிற்காட்டல்.

தியூத்தானியத் தமிழ்ச்சொற்கள்

எ-டு:

கூ, கூவு-coo, கரை-cry, crow, ஊள்-ஊளை-howl, கனை-neigh, பிளிறு-blare, உரறு-roar

எல்ல-எல்லா-hallow

இதோ - to அதோள்- thider, இதோள்-hider, எதோள்-whider ஆன் (அங்கு) yon, ஆண்டு-yond, yonder.

சப்பு-sup, sip, தின்--dine, விக்கு--hiccup, துப்பு--spit, இரு--are, is, ஈன்--can, yean, பிறந்தை-birth, துருத்து-thrust, நாடு-O.E. neod, E.need.

அம்மா-ma, mamma, அப்பா-pa, papa, தா-da, தாதா-தாதை-dada, daddy, dad, மகன்-magus (gael.) mac (E) குரு-கரு (குழவி)-gor(LG), குருளை- gurle(ME), girl (E), குட்டி-kid, kiddy, குழந்தை-cild(OE), child (E) சிறுக்கன்-சிக்கன்-cicen(OE), chicken(E) பையன்-ME. Boi, E.boy

லாலா-லாலாட்டு-தாலாட்டு-lull-lullaby(E), lulla(Sw), lullan(Du)

உதள்-E. wether, Os. withar, OHG. widar, ON. vethr, Goth. withrus. புல்லம்-bull, பூசை-puss, pussy, கொத்தி (க.)-cat, ஏழகம்-elk, elke, களவன் (கடப்பான்)-OE. crabba, E.crab, MDu; MLG. krabbe, ON. krabbi, சுறவு-shark, நாகம்-E. snake, OE. snaca, MLG. snake, ON snakr snokr.