பக்கம் எண் :

திரிநிலைப் படலம்95

(4) பெயர்ச்சொற்கள் ஈறுபற்றிப் பாலுணர்த்தல்

எ-டு: கர் (வீடு), பாணீ (நீர்)-ஆண்பால்.

காடி (வண்டி), புஸ்தக் (பொத்தகம்)-பெண்பால்.

(5) வினாச்சொற்கள் ககர முதலவாதல்

எவ்-வெ-கெ. கித்னா=எத்துணை (எவ்வளவு), கஹான்=எங்கே

L. quid (what), quout (how many); Skt. kim (what), kat (which)

இக் ககரமுதல் மராத்தியிலேயே தொடங்கிவிடுகின்றது.

(6) எதிர்மறைத் துணைவினை தலைமைவினைக்கு முன்வரல்

எ-டு: கபீ மத் ஜானா.
வஹ் நஹீன் ஆத்தா ஹை.

(7) நேரல்கூற் றிணைப்புச்சொல் கூற்றிற்கு முன்வரல்

எ-டு: உஸ்னே கஹாகி "மைன் கல் ஆவூம்."

14. மேலையாரியம்

வட திரவிடத்தைப் பேசிய வடநாவல மக்கள், வடமேற்காகச் சென்று மேலையாசியாவிற் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பியும் நண்ணிலக் கடற்கரை நாடுகளில் வாழ்ந்து ஆரிய நாகரிகத்திற்கு அடிகோலியும், பல்வேறு நாட்டினங்களாய்ப் பிரிந்துபோயினர் என்பது, மொகெஞ்சோதரோ-அரப்பா நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்குமுள்ள ஒற்றுமையாலும், நண்ணிலக் கடற்கரைநாட்டு மக்களின் பழக்கவழக்கங்கட்கும் தமிழர் பழக்கவழக்கங்கட்கு முள்ள ஒப்புமையாலும், மேலையாசிய மொழிகளிலும் வடஆப்பி ரிக்க மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வழங்கும் தமிழ்ச்சொற்களாலும், அறியப்படும்.

வடமேலை யாப்பிரிக்காவைச் சேர்ந்த கானாமொழியிலும், வா, போ, தூக்கு முதலிய தமிழ்ச்சொற்கள் அடிப்படைச் சொற் களாய் அமைந்திருப்பது. மிகக் கவனிக்கத்தக்கதாம்.

மொகெஞ்சோதரோ முத்திரையெழுத்துகள் தமிழெழுத்துக் களின் மூலவடிவைக் காட்டுகின்றனவெனின்,அது அவை தமிழெ ழுத்துகள் வளர்ச்சியடையாத நிலையில் வடக்கே சென்ற தமிழர் கையாண்ட எழுத்துமுறை என்பதை யல்லது, தமிழர் வடக்கினின்று தெற்கே வந்தார் என்று உணர்த்தாது. மேனாடுகளிற் செய்யப்பெறும் புதுப்புனைவுகளின் (Inventions) பழைய அமைப்புகள் இந்தியாவில் வழங்கிவருவதும், அது இந்தியரே அவற்றைக் கண்டுபிடித்தார் என்று காட்டாமையும், காண்க.