பக்கம் எண் :

104தமிழ் வரலாறு

பரதம் என்னும் தமிழ் நாடகநூல், பிற்காலத்தில் வட மொழியில் அதே பெயருடன் மொழிபெயர்க்கப்பட்டது.

கணியம், ஏரணம் முதலிய பிற அறிவியல்களும் கலைகளும் ஒவ்வொன்றாய் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்கெல்லாம் சென்ற செலவு தமிழரதே. ஆரியர் தேவர் என்னும் நம்பிக்கையினால், அவரை விருப்பம்போற் செய்யுமாறு விட்டுவிட்டனர் மூவேந்தரும்.

அகத்தியர் இடைக்கழகத்திற்கும் பாரதக்காலத்திற்கும் இடைப் பட்டவர். அவர் ஒரு கழகத்திலும் இருந்ததில்லை. தொல்காப்பியர் பாரதக்காலத்திற்குப் பிற்பட்டவர். ஆதலால், அகத்தியரும் தொல் காப்பியரும் முறையே தலைக்கழகத்திலும் இடைக்கழகத்திலும் இருந்தனரென்பதும், பின்னவர் முன்னவரின் மாணவர் என்பதும், கட்டுக்கதைகளே.

7. சமற்கிருதத்தின் பின்மை

வேதமொழியும் சமற்கிருதமும் ஒன்றேயென்றும், மேலை யாரிய மொழிகட்கெல்லாம் சமற்கிருதமே தாய் அல்லது தாய்க் கடுத்த நிலையென்றும், இரு தவறான கருத்துகள் மேனாட் டறிஞரிடை யிருந்து வருகின்றன.

ஐரோப்பிய ஆரியமொழிக் குடும்பங்கட்குள், வடமேற் கோடி யிலுள்ள தியூத்தானியம் மிக முந்தியதாயும், இலத்தீனம் அதற்குப் பிந்தியதாயும், கிரேக்கம் இலத்தீனுக்குப் பிந்தியதாயும் சமற்கிருதம் கிரேக்கத்திற்கும் பிந்தியதாயு முண்மையை, அவற்றின் சொற்றிரிபே காட்டுகின்றது.

8. ஆரியமொழிகளின் படிமுறைத் திரிபு

தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் சமற்கிருதம்
அதோள்
அம்மை
அல்-அன்
(எதிர்மறை
முன்னொட்டு)
இதோள் இரு
இரும்பு
இல் (உள்)
திதெர்
அம்மா,மம்மா
அன்
.
.
ஹிதெர்
ஆர், இஸ் இரன்,ஐயெர்ன்
இன்
-
-
-
.
.
கித்ர
எஸ்
ஈரிஸ்
இன்
இந்த்தெர்
(உ.த.)
-
-
அன்
.
.
-
எஸ்
-
என்
-
தத்ர
அம்பா

.
.
அத்ர
அஸ்
அயஸ்
.
அந்த்தர்