பக்கம் எண் :

113

4

மறைநிலைப் படலம்

(தோரா. கி. மு. 1000-இன்றுவரை)

குழையும் குச்சும் ஒடிக்கப்பட்டும், கிளையும் கொம்பும் கவையும் அடியும் வெட்டுண்டும், மீண்டும் வேரினின்றும் தூரினின்றும் தளிர்த்துத் தழைத்தோங்கும் மரம்போன்று இருக்கும் தமிழை, அடிவரை சிதைத்த பின்பும் அரை அடியோடு மறைத் தற்குப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர் தமிழின் பிறவிப் பகைவரான ஆரியர்.

(1) தமிழ்மறைப்பு

பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், சமற் கிருதத்தினின்று பிராகிருதமும், பிராகிருதத்தினின்று தமிழும் வந்ததாகக் கூறப்படுகின்றது. ஒருசார் வடமொழியாசிரியர் தமிழை ஒரு பிராகிருதமாகவும் குறித்திலர்.

12ஆம் நூற்றாண்டிற் பொய்யாமொழிப் புலவர் மதுரை சென்று தமிழ்க்கழகத்தைப் புதுப்பிக்க முயன்றும், பயன்பட வில்லை.

எழுத்தாலத்தி (அக்கராலத்தி) என்னும் வழிபாட்டுவகையில், தமிழுக்கேற்ப 30 விளக்கேற்றப்பெறாது, வடமொழிக்கேற்ப 51 விளக்கேற்றப்படுகின்றன.

(2) தமிழ்நாடு மறைப்பு

நாவலம் பொழிலைச் சம்புத்தீவம், பரதகண்டம், இந்துதேசம் என்றும், திரவிடமாநிலத்தைப் பரதகண்டத்தின் தென்கோடி மண்டலம் என்றும், சேரநாட்டைப் பரசுராமச்சேத்திரம் என்றும் கூறித் தமிழ்நாடு முற்றும் மறைக்கப்பட்டுள்ளது. குமரிநாட்டில் மக்களிருந்ததில்லை யென்பதும் தமிழ்நாடு மறைப்பே.

(3) தமிழ் இனமறைப்பு

வேதவொழுக்கத்தைக் கைக்கொள்ளாமையால் விலக்கப் பட்ட சத்திரிய வகுப்புகளுள் ஒன்றாக, திரவிட இனத்தைக் குறித் துள்ளார் மனுதரும நூலாசிரியர் (10: 43: 44).