(35) அண்ணாமலை பல்கலைக்கழக
மொழியியல் துறைத் தொடக்கவிழாத் தலைவர் பர்.
சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக்
கழகத்தி னின்று அகற்றுதல்.
(36) பர் சட்டர்சியும்
பர்.கத்திரேயும் இந்திய ஞாலநூலியல்
வரலாறு-முதன்மடலத்தில் (Gazetteer
of India - Vol. I) தமிழைப் பற்றி
வரைந்துள்ள தவறான கருத்துகளைத் திருத்துதல்.
2. தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை
(1) உண்மையான தமிழ்
வரலாற்றை ஆங்கிலத்தில் வெளி யிட்டு உலக
முழுதும் பரப்புதல்.
(2) வெளிநாடுகளிலுள்ள
தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள்,
பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள்
முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சி
யாளரைக் கானா, எகிபது, பிரனீசு, மலைநாடு,
மெகசிக்கோ (Mexico),
காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு
முதலிய நாடுகட்கு அனுப்புதல்.
(3) வெளிநாடுகளுடன்
போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய
மாநிலங்களோடும், எழுத்துப் போக்குவரத்து
ஆங்கிலத்திலேயே நடத்துதல்.
(4) ஒவ்வொரு
பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் பதவி
ஏற்படச்செய்தல்.
(5) தமிழ்மொழி
நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு
விடைமுகவர் குழுவை (Delegation),
உலகஞ் சுற்றிவரச் செய்தல்.
(6) தமிழர்
பெருந்தொகையினராயுள்ள இலங்கைபோன்ற
வெளிநாடுகளில், இந்தியத் தூதாண்மைக் குழுவில்,
தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூய தமிழர்
ஒருவரும் இருக்கச் செய்தல்.
(7) ஆக்கசுப்போர்டு (Oxford)
ஆங்கில அகரமுதலியிலும் பிரித்தானியக்
கலைக்களஞ்சியத்திலும(Encyclopaedia
Britanic) தமிழைப் பற்றிய தவறான
குறிப்புகளையும் கூற்றுகளையும் உடனே திருத்தச்செய்தல்.
|