இ. இது ஆண்பாலொழிந்த மூவிட
வொருமைப்பால்களில் வரும்.
எ-டு: தடங்கண்ணி, நீர்முள்ளி
(3) இல்லானீறுகள்
இலி, அறை. இவை மூவிட
வொருமைப்பாலிலும் எண்ணி லும்வரும்.
எ-டு: அறிவிலி=அறிவில்லாத நான், நீ.
அறிவில்லாதவன்-வள்-து.
காதறை=காதில்லாத நான், நீ.
காதில்லாதவன்-வள்-து.
(4) கொண்டானீறு
கொள்ளி கொளி. இவை மூவிட
வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம்.
எ-டு: பித்துக்கொளி=பித்துக்கொண்ட நான்,
நீ.
பித்துக்கொண்டவன்-வள்-து.
அடைகொளி=அடைகொண்டது.
(5) செயப்படுபொருள் ஈறு
அம்-ம். எ-டு:தொல்காப்பியன் தொல்காப்பியம்
= தொல் காப்பியனால் இயற்றப்பட்டது.
சேனாவரையன்-சேனாவரையம்=சேனாவரையனால்
உரைக்கப் பெற்றது.
(6) இடப்பெயர் மரூஉ ஈறுகள்
எ-டு: அந்தை-உறந்தை, கரந்தை, களந்தை,
குடந்தை.
ஐ - அளகை, உஞ்சை, தஞ்சை, தருமை,
கருவை, மழவை, முகவை, நெல்லை, ஆறை, சென்னை.
சை - இளசை, துறைசை,
பனசை.
வை - கோவை, புதுவை.
காஞ்சி-திருச்சி முதலியவை ஈறு
கருதாத குறுக்கங்கள்.
(4) வேற்றுமை யுருபுகள்
மொழி பொதுமக்கள் அமைப்பாதலின்,
அதன் இன்றியமை யாத கூறுகளான வேற்றுமையுருபுகளும்
அவர்கள் அமைத்தனவே. வேற்றுமைகளை ஏழென்றும் எட்டென்றும்
வரையறுத்தும்,
|