பக்கம் எண் :

இயனிலைப் படலம்47

இயர்
இயர்-இய.
அல்+கு
தல்+கு
உம்+என.
.
- வான்.
- பான்.
- மான்.
- மார்.
- பாக்கு
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
.
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
செய்யியர்
செய்யிய
செயற்கு (செயல்+கு)
செய்தற்கு(செய்தல்+கு)
செய்யும்+என=செய்யுமென- செய்ம்மென-செய்ம்மன
செய்வான் (வி.மு.)-செய்வான் (வி.எ.)
உண்பான் (வி.மு.)-உண்பான் (வி.எ.)
செய்மான் (வி.மு.)-செய்மான் (வி.எ.)
செய்மார் (வி.மு.)-செய்மார் (வி.எ.)
செய்பாக்கு, உண்பாக்கு (வி.எ.)

செய்ம்மன என்பதைச் செய்தென என்பதனொடு ஒப்பு நோக்குக. செய்ம்மன = செய்யும் என்று சொல்லும்படி.

ஈ என்பது ஒரு துணைவினை. ஈயல்=ஈதல், ஈயல்வேண்டும்-ஈயவேண்டும். ஈயல்-ஈயர். ல-ர, போலி. ஈயர்-இயர்-இய. இது உதவி வினையீறு; பின்னர்ப் பொதுவினை யீறாயிற்று.

வான், பான், மான், மார் என்பன முற்றெச்ச வீறுகளே. இவற்றுள் முதலிரண்டுமட்டும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாக்கப் பட்டன.

பாக்கு = பகுதி. பகு-பாகு-பாக்கு-பாக்கம். செய்பாக்கு = செய்யும் பகுதியில், செய்யுமாறு. வந்தால் என்பதை வரும்பக்கத்தில் (வரும் பட்சத்தில்) என்று கூறும் வழக்கை இதனொடு ஒப்பிடுக. பகு-பக்கம்.

நிலைப்பாட்டு வினையெச்ச ஈறுகள்

ஆல்
இல் இல்-இன்
கால்
எ-டு:
எ-டு:
எ-டு:
எ-டு:
செய்தால் (செய்து+ஆல்).
வரில்.
செய்யின்-செயின்.
செய்தக்கால்.

இல் என்பது இடப்பொருள் அல்லது கருவிப்பொருளுருபு. வரில் என்பது வருகையில் அல்லது வருகையினால் என்று பொருள் படுவது. ஆதலால், அது வினைமுதனிலையெல்லாம் தொழிற் பெயராய் ஆளப்பட்ட காலத்துத் தோன்றியதாகும். வருகையில் = வருகையின் பேரில்.

ல்-ன். வரில்-வரின்.

ஆல் என்பது இல் என்பதன் திரிபு. காலத்திலே என்பதைக் காலத்தாலே என்று கூறும் வழக்கை நோக்குக.