|
மகுட இடைச்சொற்கள்
தாலாட்டுப் பாட்டு-தாலோ தாலேலோ
கப்பற் பாட்டு-ஏல ஏலோ ஏல ஏலோ
கூப்பீட் டிடைச்சொற்கள் (அஃறிணைபற்றியன):
எ-டு: தோதோ (துவா துவா), பேபே (போ போ)
நாயேவ லிடைச்சொற்கள்
எ-டு: உசு, உரீசு
இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப்பிடைச்
சொற்களும் :
பிள்ளைகள் துன்புறுமிடத்தும் வியக்கத்தக்க
பொருளைக் காணும்போதும், தம் பெற்றோரை
விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயர்களினின்று
இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப்
பிடைச்சொற்களும் தோன்றியுள்ளன.
|
பெற்றோர்பெயர்
|
இடைச்சொல்
|
பெற்றோர்பெயர்
|
இடைச்சொல்
|
ஐயன்
அன்னை
அத்தன்
அச்சன்
அக்கை
|
ஐயோ, ஐயவோ
ஐயகோ, ஐயே
அன்னோ அத்தோ,அந்தோ
அந்தவோ
அந்தகோ
அச்சோ
அக்கோ-அகோ |
அப்பன்
அம்மை
அச்சன்
அக்கை
ஆத்தை |
அப்ப, அப்பா
அம்ம, அம்மா
அச்சோ
அகோ
ஆத்தே |
உலகவழக்கில், வியப்புக்குறிப் பிடைச்சொற்கள்
ஆண்பாற் பெயர்த்திரிபாயின் அடா(அடே) என்னும்
சொல்லையும், பெண் பாற் பெயர்த்திரிபாயின் அடி
(அடீ) என்னும் சொல்லையும்,முற் கொள்ளும்.
ஆஆ என்னும் உணர்ச்சி யொலியடுக்கு, ஆவா
என்று புணர்ந்து இரக்கக்குறிப் பிடைச்சொல்லும்,
அதன்பின் ஆகா என்று திரிந்து வியப்புக்குறிப்
பிடைச்சொல்லும் ஆகும்.
அட, அடா, அடடா என்பன வியப்பும் கழிவிரக்கமும்
உணர்த்தும் இடைச்சொற்களாம். அளிது, கெட்டேன்
என்னும் இரக்கச்சொற்களுள் முன்னது செய்யுள் வழக்காம்.
|