|
எ-டு: அவன் "நாளை வருவான்" என்று
சொன்னான்.
முடிக்குஞ்சொல் என்றான் என்னும் வினைமுற்றாயின்,
இணைப்புச் சொல் வராது.
எ-டு: அவன் "நாளை வருவேன்" என்றான்.
அடி அடி என்று அடித்தான், தின் தின் என்று
தின்றான் என்பவற்றில், என்று என்னும் சொல் கூற்றைக்
குறியாது வினை மிகுதியை அல்லது கடுமையை உணர்த்தும்.
மன்ற என்பது தேற்றமும், தஞ்சம் என்பது
எளிமையும், எல்லே என்பது இரக்கமும் உணர்த்தும்.
"எல்லே யிலக்கம்." (தொல்.இடை.
21) என்னும் பாடம் தவறானதாகும். எல் என்பது ஒளியையும்
பகலையும் கதிரவனையும் குறிக்கும் பெயர்ச்சொல்லாதலால்,
இடைச்சொல் லாகாது. "ஏதிலேன் அரங்கற் கெல்லே"
என்று, நாலாயிரத் தெய்வப் பனுவலில் (திருமாலை. 26)
எல்லே என்பது இரங்கற் பொருளில் வந்திருத்தல்
காண்க.
தாலாட் டிடைச்சொற்கள்
எ-டு: லாலா, ரோரோ.
இவை இலக்கிய நடையில் தாலா, ஓரோ
என்றெழுதப் பெறும். புள்ளோப்ப லிடைச்சொல்:
ஆலோலம்.
பிதற்றற்குறிப் பிடைச்சொற்கள்
எ-டு: ஆலே பூலே, கன்னா பின்னா, கன்னாரை
பின்னாரை, காமாசோமா.
ஆளத்தி யிடைச்சொற்கள்
எ-டு: தரனன்னா தன்னானா, தரனன தோம்நோம்
வண்ணமெட் டிடைச்சொற்கள்
எ-டு: தன்னனன்னே நானனன்னே நானனன்ன நானா
வண்ணக்குழிப் பிடைச்சொற்கள்
எ-டு: தான, தத்த, தந்த, தய்ய, தன்ன, தனன,
தனதான
தில்லானா இடைச்சொற்கள்
எ-டு: தீம் தீம் உதரிதான தனதிரனா தீம்
|