|
1. அடுக்கிணைப்புச் சொற்கள் (Cumulative
Conjunctions)
எ-டு: என, எனவும், எனா, என்று, என்றும்,
என்றா. இவை சொற்களையும் சொற்றொடர்களையும்
இணைக்கும்.
2. மறுப்பிணைப்புச் சொற்கள் (Adversative
Conjunctions)
எ-டு: ஆனால், ஆனாலும், ஆயின், ஆயினும்,
இருந்தாலும், இருந்தபோதிலும், இருந்தாற்கூட, எனினும்,
என் றாலும். இவை சொற்றொடர்களையே இணைக்கும்.
3. மறுநிலை யிணைப்புச் சொற்கள் (Alternative
Conjunctions)
எ-டு: அல்லது, எனினும், என்றாலும், என்றோ.
இவற்றுள், "அல்லது" சொல்லையும்
சொற்றொடரையும் இணைக்கும்; சொல்லை யிணைப்பின்,
ஒவ்வோர் இரு சொல் லிடையும் ஒவ்வொரு முறை வரும்;
ஏனைய சொற்களை மட்டும் இணைக்கும்.
4. உய்த்துணர் விணைப்புச் சொற்கள் (Illative
Conjunctions)
எ-டு: ஆகையால்,
ஆகையினால், ஆதலால், ஆகவே, எனவே. இவை சொற்றொடர்களை
இணைப்பன.
தனிப் பொருளிடைச் சொற்கள்
என
இது கரணியம் (காரணம்), பொருட்டு, பெயரீடு,
இணைப்பு, ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு, வண்ணக்குறிப்பு,
காலக்குறிப்பு முதலிய பொருள்களில் வரும்.
இது என் என்னும் வினையின் அகரவீற்று
எச்சமாகும்.
வெள்ளென வா-காலக்குறிப்பு
வெள்ளென = கிழக்கு வெளுக்கும்போது,
விடிகாலையில், குறித்த நேரத்திற்கு முன்பே.
என்று
இது பெயரீடு, இணைப்பு, ஒலிக்குறிப்பு,
விரைவுக் குறிப்பு, வண்ணக்குறிப்பு முதலிய
பொருள்களில் வரும்.
இது என் என்னும் வினையின் இறந்தகால
எச்சமாகும்.
உலக வழக்கில், நேர்கூற்றை
(Direct Speech) முடிக்குஞ் சொல்லோடு இணைப்பது
இஃதொன்றே.
|