பக்கம் எண் :

58தமிழ் வரலாறு

உ-இ-எ-ஏ-ஏண்-யாண்-யாணம்-யாணர்
உ-உல்-உள்-சுள்-சுண்-சுண்ணம்-சுண்ணம்பு- சுண்ணாம்பு
உ-உல்-முல்-மல்-மன-மன்று-மந்து-மந்தை

2. தொழிற்பெயர் முதனிலையாதல்

நகு-நகை (தொ. பெ.)-நகைப்பு
கள்-களி (தொ. பெ.)-களிப்பு
வள்-வளை (தொ. பெ.)-வளைவு
குள்-கொள்-கொளும்-(தொ. பெ.)-கொளுமு- கொளுமூ-கொண்மூ

3. இயலொலிச்சொல் திரியொலிச்சொற் பொருள் தரல்

பள்-பண்டு. பள்-பழ-பழமை
அர்-அரங்கு. அர்-அறு-அறை

4. இயற்சொல் திரிசொற்பொருள் தரல்

தில்-திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள்-திரளை- திரணை

வல்-வள்-வண்-வண்ணம்-வண்ணகம். வள்-வர்-வரி- வரணம்.

வளைத்தல் = வளைத்தெழுதல், எழுதுதல்.

"உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" (நெடுநல். 113)

வரி = வளைகோடு, எழுத்து.

வரிதல் = 1. எழுதுதல் (பிங்.) 2. சித்திரமெழுதுதல்.

"வல்லோன் றைஇய வரிவனப் புற்ற, வல்லிப்பாவை"

(புறம்.33)

வரித்தல் = 1. எழுதுதல்.

"வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை" (சீவக . 2532)

2. சித்திரமெழுதுதல்.

திரணை என்னும் சொற்பொருளைத் திண்ணை என்னும் சொல்லே குறித்தல்போல், வரணம் என்னும் சொற்பொருளை வண்ணம் என்னும் சொல்லே குறிக்கும் என அறிக.

வள்ளுதல்=வளைதல், வளைத்தெழுதுதல்.

5. வினைவளர்ச்சி

செய்-செய்கின்று-செய்கின்றான்-செய்கின்றனன்.