பக்கம் எண் :

இயனிலைப் படலம்59

6. வினைமுதனிலை வளர்ச்சி

கல்-கற்பி-கற்பிப்பி-கற்பிப்பிப்பி

நட-நடத்து-நடத்துவி-நடத்துவிப்பி-நடத்துவிப்பிப்பி

7. பெயர் வளர்ச்சி

நடத்துவிப்பிக்கின்றவனிடத்தில் (7ஆம் வே.)

(7) பின்னமைப்பு (Back formation)

ஒரு திரிசொல்லின் முதலை அல்லது ஈற்றை நீக்கி மற்றொரு சொல்லை அமைத்துக்கொள்வது பின்னமைப்பாம்.

எ-டு:

முழுத்தல் = திரளுதல், பருத்தல். முழு-முழா = திரண்டமுரசு.

முழா-மிழா = பருத்த மான்வகை (ளவயப). மிழா-மேழம்- மேழகம்-ஏழகம்-ஏடகம்-ஏடு-யாடு-ஆடு.

மேழம் = பருத்த செம்மறியாட்டுக் கடா. மேழகம் = செம்மறிக்கடா.

"வெம்பரி மேழக மேற்றி" (சீவக.521)

ஏழகம் = செம்மறிக்கடா, செம்மறி, வெள்ளாடு.

யாடு = ஆட்டின்பொது (தொல்: பொருள்.567)

மேழகம் என்னும் சொல்லின் திரிபினின்று ஆடு என்னும் சொல்லை அமைத்துக்கொண்டது பின்னமைப்பாம்.

வேந்தன் என்னும் சொல்லினின்று வேந்து என்னும் வடிவை அமைத்ததும் பின்னமைப்பே. வேய்ந்தோன் = முடியணிந்தோன்.

வேய்ந்தோன்-வேந்தன் = முடியணிந்த சேர சோழ பாண்டியருள் ஒருவன். வேந்தன்-வேந்து.

(8) சொற்பண்படுத்தம்

1.மொழிமுதலாகா முதலெழுத்தை மொழிமுதலெழுத்தாக்கல்.

எ-டு:

லாலாட்டு-ராராட்டு-ரோராட்டு.

என்பது பண்படாத உலகவழக்கு. ரோரோ என்று ஆட்டுவது ரோராட்டு.

தாலாட்டு, ஓலாட்டு-ஓராட்டு என்பன பண்பட்ட தமிழ் வழக்கு.