நாட்டிலிருந்து வந்த பொருள்கட்கெல்லாம் உடனுடன்
தூய தமிழ்ச்சொற் பெயர்களையே புனைந்திட்டிருக்கின்றனர்.
எ-டு:
பொருள் தோன்றிய இடம்
|
பொருட்பெயர்
|
அரபி
சீனம்
அமெரிக்கா, பாரசீகம்
அமெரிக்கா
மேலையிந்தியத் தீவுகள்
துருக்கி
தென்னமெரிக்கா,
மேலையிந்தியத் தீவுகள்
இங்கிலாந்து
. |
குதிரை, பேரீந்து
கரும்பு
புகையிலை
உருளைக்கிழங்கு
அண்டிமா, முந்திரி(Cashew)
வான்கோழி
செந்தாழை (Pineapple)
.
புகைவண்டி
மிதிவண்டி (Cycle) |
கஃடு, கஃது, கஃபு என்னும் சொற்களின்
பொருள் யாவையென்றே தெரியாது முற்றும்
மறைந்துவிட்டன. இடா, ஒருஞார், ஒரு துவலி என்பன
எவ்வகை அளவென்று தெரியவில்லை.
ஒட்டகமும் குதிரைபோல்
அரபிநாட்டினின்று வந்ததே. தொல்காப்பிய
மரபியலில் ஒட்டகம் குறிக்கப்படுகின்றது.
தமிழ்நாடு அரபிநாட்டொடு தொன்றுதொட்டு வணிகம்
செய்துவந்ததினால், ஒட்டகம் தமிழ்நாட்டிற்கு
வந்ததொடு அதன் பெயரும் இலக்கியத் தில்
மட்டுமன்றி இலக்கணத்திலும் இடம்பெறலாயிற்று.
அதன் அரபிப் பெயர் சமல் (Jamal)
என்பதாம். ஆகவே, ஒட்டகம் என்பது
அக்கால மரபுப்படி
தமிழ்ச்சொல்லாகவே யிருத்தல் வேண்டும். ஒரு
மாதம்வரை பட்டினியிருக்கும் திறம் ஒட்டகத்தின்
சிறப்பியல்பாம். ஒட்டப் போடுதல் =
பட்டினியிருத்தல். ஆதலால், அத் திறம்பற்றி
அதற்கு அப் பெயர் இடப்பட்டிருக்கலாம்.
சமற்கிருதத்தில் அரை உஷ்ட்ரக்க என்று திரித்து,
அதினின்று ஒட்டகம் என்னும் சொல் வந்ததாகக்
கூறுவர். செந்தமிழைச் சீர்குலைக்கும் சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிலும், இங்ஙனமே
குறிக்கப்பட் டுளது. எரிதல் வினை யைக் குறிக்கும்
உஷ் என்னும் அடியினின்று உஷ்ட்ரக்க என்னும்
பெயர் தோன்றியதாகக் கூறுவர் வடவர். இது
பொருந்தப் பொய்த்தல் என்னும்
உத்தியே. ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே
ஒட்டகம் தமிழகத்திற்குட் புகுந்து விட்டது. மேலும்,
உஷ் என்னும் வடசொல்லும் உள் (ஒள்) என்னும்
தென்சொல்லின் திரியே.
ஒட்டகத்திற்கு
நெடுங்கழுத்தன்-நெடுங்கழுத்தல், நெடுங் கோணி
என்றும் பெயருண்டு.
ஆரியச் சார்பினால், தமிழ்
கெட்டதுமன்றித் தமிழர் தம் தாய்மொழி
யுணர்ச்சியையும் இழந்தனர். அதனால் அவரும்
|