தாழ்வுற்றனர். அவர் மீண்டும் தழைக்கவேண்டின்,
தம் முன்னோ ரைப்போல் தமிழைப்
போற்றல்வேண்டும். ஆகவே, மோட்டார் என்பதை
இயங்கி என்றும், காப்பி என்பதைக் குளம்பி
என்றும், தேநீர் என்பதைக் கொழுந்துநீர் என்றும்,
சொல்வதே தக்கதாம்.
பிறமொழிச் சொல்லைக்
கடன்கொள்வதால் தமிழ் வளரும் என்பார்,
தமிழறியாதவரும் தமிழ்ப்பகைவரும் தமிழைக்
காட்டிக் கொடுப்பவருமே யாவர்.
(10) சொல்வளம்
தமிழ் மிகுந்த சொல்வளமுடையதென்பதை,
நால்வகை யிலைப் பெயராலும், ஐவகைப் பூநிலைப்
பெயராலும், முக்கனி களின் பிஞ்சு நிலைப்
பெயராலும், வெவ்வேறு சிறப்புப் பொருளிற்
சொல்லுதலைக் குறிக்கும் அறை, இயம்பு, இசை, உரை,
என், ஓது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல்,
நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு,
புகல், புலம்பு, பேசு, மாறு, மிழற்று, மொழி, விளத்து,
விளம்பு முதலிய சொற்களாலும், எழுநிலைப்
பெண்ணிளமைப் பெயர்களாலும், பிறவற்றாலும்
அறியலாம்.
வெளிநாட்டினின்று வந்த
குதிரையினத்தைக்கூட, எண்வகை யாகவும் தமிழர்
வகுத்து, அவற்றிற்கேற்பப்
பெயரிட்டிருக்கின்றனர்.
மூவேந்தர் குதிரைகளும் குறுநிலமன்னர்
குதிரையும் வெவ் வேறினத்தைச் சேர்ந்தவை,
பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை
கோரம். இவை எண்வகையுள் அடங்காதவை. இவற்றின்
விளக்கத்தை என் "பண்டைத்தமிழ் நாகரிகமும்
பண்பாடும்" என்னும் நூலிற் காண்க.
கொடைவேண்டல் பற்றிய சொற்கள்
ஈ என்பது இழிந்தோன் ஆளும் சொல்
தா என்பது ஒத்தோன் ,,
,,
கொடு என்பது உயர்ந்தோன்
,, ,,
தவசமணிபற்றிய சொற்கள்
முற்ற விளைந்தது மணி;
அரைவிளைச்சலானது அரை வயிறன்; உள்ளீடற்றது
பொக்கு அல்லது பதர்.
சொத்தைத் தேங்காய்பற்றிய சொற்கள்
கோட்டான் உட்கார்ந்தது
கோட்டான்காய் அல்லது கூகைக் காய்; தேரை
அமர்ந்தது தேரைக்காய்; ஒற்றையாள் தென்னை
|