மரத்தடியில் இளநீர் குடித்ததால் ஏற்பட்டது
ஒல்லித்தேங்காய்; முற்கூறிய இருவகையும்
அல்லித்தேங்காய். "ஓற்றையாள் குடித்தால்
ஒல்லிபடும்" என்பது சொலவடை. இது,
பக்கத்திலிருப்பவரையும் குடிப்பியாது தனியாய்க்
குடித்தல் கூடாதென்னும் தமிழப் பண்பாட்டை
உணர்த்துவதாகும்.
ஓணான் வகைபற்றிய சொற்கள்
சில்லான், ஓணான், கரட்டை, கோம்பி
(பச்சோந்தி).
பிணம்பற்றிய சொற்கள்
செத்தணிமையானது சவம்; இறந்து ஒரு
நாட்கு மேற்பட்டுக் கட்டுவிட்டது பிணம்;
பன்னாளாகி அழுகிப்போனது அழன்.
இங்ஙனம் சொல்லிக்கொண்டே
போகின் ஒரு பெருநூலாய் விரியுமாதலின்,
இம்மட்டில் இங்கு நிறுத்தலாயிற்று. இற்றை
நிலையிலேயே ஒருபொருட் பலசொற்கள் தமிழில்
ஏராளமா யுள்ளன. பண்டை யிலக்கியமெல்லாம்
செய்யுளிலிருந்ததினால், மோனை யெதுகைக் குதவுமாறு
ஒரே உயிரிக்குப் பல பெயர்களை
அமைத்திருக்கின்றனர்.
எ-டு: யானை-ஆம்பல், உம்பல், உவா,
எறும்பி, ஓங்கல், கடமா, கடிவை, கம்பமா, கரி,
கவளமா, களிறு, கறையடி, குஞ்சரம், கும்பி,
கைப்புலி, கைம்மலை, கைம்மா, சிந்துரம்,
தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பகடு,
பிணிமுகம், புகர்முகம், புழைக்கை-பூட்கை, பெருமா,
பொங்கடி, மதமா, மதங்கம், மதாவளம், மருண்மா,
மொய், வழுவை, வாரணம், வேழம்.
இங்ஙனம் வேறெம் மொழியிலும்
காண்டற்கரிது . வடமொழி யிலிருப்பவை,
பெரும்பாலும் தமிழிலிருந்து கடன்கொண்டனவும்
தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப்புமே.
ஈராயிரங் கல் தெற்கு நீண்டிருந்த
பழம்பாண்டிநாட் டுலகவழக்குச் சொற்களும், முதலிரு
கழகத்துப் பல்லாயிரம் தனித்தமிழ் நூல்களின்
இலக்கியச்சொற்களும், இன்றிருந்திருப்பின்,
தமிழ்ச் சொல்வளம் எத்துணைப்
பரந்துபட்டிருக்கும் என்பதை உய்த்துணர்ந்து
கொள்க.
(11) மொழிச்செம்மை
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின்,
அறியாமையாலும் சோம்பலாலும்
தாழ்வுணர்ச்சியாலும் தமிழ்ப்பற்றின்மையாலும்
ஏற்பட்ட கொச்சைவழக்கு, நீண்டகாலமாக
இருந்துதான்
|