பக்கம் எண் :

64தமிழ் வரலாறு

வந்திருக்கின்றது. ஆயினும், ஏடெடுத் தெழுதும்போதும் மேடை யேறிப் பேசும்போதும் திருந்திய நடையையே கையாளவேண்டு மென்று, தொன்னூலாசிரியர் ஓர் அழியா வரம்பிட்டுவிட்டனர். அவ் வரம்பே, புரவலரும் புலவரும் இல்லாக்காலத்தும், பகைவரும் கொண்டான்மாரும் பல்கியபோதும், பைந்தமிழை வேலியாகக் காத்து வந்திருக்கின்றது. இவ் வரம்பு ஏனை மொழிகட்கில்லை. அதனால், அவை மக்கள் வாய்க்கு வந்த வகை யெல்லாம் வழங்கி, அவற்றின் பல ஒழுங்கின்றியும் உருத்தெரியாதும் போயின. தமிழுக்கு எது வழுநிலையோ அது பிறமொழிகட்கு வழாநிலையாயிற்று.

செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்பு என்பன, முறையே செப்பு, திப்பு, நிப்பு, பப்பு எனத் தமிழில் வழங்கின் வழுநிலையாம்; தெலுங்கில் வழங்கின் வழாநிலையாம்.

இகர ஐகாரவீற்றுப் பெயர்கள் 4ஆம் வேற்றுமையேற்கும் போது, குவ்வுருபு கிய்யாகத் திரிவது தமிழுக்கு வழுநிலையாம்; தெலுங்கு முதலிய பிறமொழிகட்கு வழாநிலையாம்.

எ-டு: கிளிக்கி, மலைக்கி - தமிழ் (வழுநிலை)

புலிக்கி, அக்கடிக்கி - தெலுங்கு (வழாநிலை)

அம்மை, கரை, குடை, பனை, மழை முதலிய ஐகாரவீற்றுச் சொற்களை அகரவீறாக ஒலிப்பதும், செய்யவேண்டும் என்பதைச் செய்யேணம் என்று சொல்வதும், தமிழுக்கு வழுநிலையாம்; மலையாளத்திற்கு வழாநிலையாம்.

சொற்களின் ஈற்றில் வரும் மெல்லின மெய்கள், முயற்சியொடு பலுக்கப்பெறாது மூக்கொலியளவாய் நின்றுவிடின், தமிழுக்கு வழுநிலையாம்; மராத்தி, இந்தி முதலிய மொழிகட்கு வழாநிலை யாம்.

ழகரத்தை லகரமாகவும், ஆகாரத்தை ஈகார ஏகாரங்கட் கிடைப்பட்ட ஒலியாகவும், ஒலிப்பது தமிழுக்கு வழுநிலையாம்; ஆங்கிலத்திற்கு வழாநிலையாம்.

சொற்கள் தம் சிறப்புப்பொரு ளிழந்தும் வடிவு சிதைந்தும் வழங்குவது, தமிழுக்கு வழுநிலையாம்; பிற மொழிகட்கெல்லாம் வழா நிலையாம்.

பாண்டிநாட்டுத் தமிழைச் செந்தமிழ் என்றும், பிறநாட்டுத் தமிழைக் கொடுந்தமிழ் என்றும், பண்டைக்காலத்தில் பிரித்து வழங்கியது, அவற்றிற்குச் செம்மையென்னும் பண்பு உண்மை யின்மைபற்றியே. இக்காலத்துச் சில கொண்டான்மார் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவி பெற்று, மேனாட்டாரைப் பின்பற்றி,