பக்கம் எண் :

72தமிழ் வரலாறு

காளி என்னும் பெயர் கருப்பி என்று பொருள்படும் தூய தென் சொல்; கள்-காள்-காளம்-காளி. முமுமுதற் கடவுட் கொள்கையும் உருவவணக்கமும் கோயில் வழிபாடும் வேத ஆரியர்க்கில்லை.

தம்லுக். இது தமிழகம் என்பதன் திரிபாயிருக்கலாம். வங்கஞ் சென்று குடியேறிய பண்டைத் தமிழ வணிகர் இப் பெயரை இட்டனர் போலும்!

ஊர், புரம், புரி முதலிய தமிழிடப்பெய ரீறுகள், திரிந்தும் திரியாதும் இன்றும் வடநாட்டிற் பல இடங்களில் வழங்குகின்றன. முதலில், புரம் என்பது கோபுரமுள்ள நகரையும், புரி என்பது மதில் சூழ்ந்த நகரையும் குறித்தன.

2. குலப்பெயர்கள்

பம்பாய் மண்டலத்தின் தென்பகுதியில் வாழ்ந்தவர் வேளிர் என்னும் தமிழ வகுப்பார் என்பது மேற்கூறப்பட்டது.

வாணியன் (வாணிகன்) என்னும் குடிப்பெயர் பனியா என்றும், செட்டி என்னும் குடிப்பெயர் சேட்(டு) என்றும், வடநாட்டில் வழங்குகின்றன. எட்டு-எட்டி-செட்டி. எட்டுதல்= உயர்தல். எட்டம்=உயரம். எட்டி=உயர்ந்தோன். சிரேஷ்ட என்பது சிரேயஸ் என்பதன் உச்சத்தரம் (Superlative Degree).

பாண்டவ கவுரவரின் முன்னோர் திங்கள் மரபினராதலின் பாண்டியர் வழியினரும், தசரதனின் முன்னோர் கதிரவன் மரபி னராதலின் சோழன் வழியினருமாவர், முச்சுடரையும் முதலாகக் கொண்ட மூவரச மரபுகளும் தொன்றுதொட்டுத் தென்னாட் டிலேயே இருந்து வந்தமையும், முன்பு பாண்டியரும் பின்பு சேரசோழரும் வடநாட்டையும் துணையரசரைக்கொண்டு ஆண்டமையும், சிபி வடநாட்டுக் கதிரவ மரபிற்கும் தென்னாட்டுக் கதிரவ மரபிற்கும் பொது முன்னோனாகக் கூறப்படுதலும், அதனால் சோழன் செம்பியன் என்று பெயர் பெற்றமையும் நோக்குக.

3. செந்தமிழும் கொடுந்தமிழும்

தமிழர் வடக்கே செல்லச்செல்ல. தட்பவெப்பநிலை மாற்றம், சோம்பல், புலவரின்மை, தமிழ்ப் புரவலரின்மை, புதிய சுற்றுச்சார்பு, தாய்நாட்டொடு தொடர்பின்மை முதலிய கரணியங்களால், தமிழ் திரிந்து கொடுந்தமிழ் எனப்பட்டது. திரியாத தென்னிலத் தமிழ் செந்தமிழ் எனப் பெற்றது. சிலர் கொடுந்தமிழ் திருந்திச் செந்தமிழாயிற் றென்பர். அவர் அறியார். தமிழ் வளர்ச்சியில் முற்பட்ட திருந்தாத நிலைகளெல்லாம் குமரிக்கண்டத்தின் தென்பாகத்திலேயே தீர்ந்து விட்டன.