எ.கா: வினைமுற்று மறுப்பிணைப்புச்சொல்
ஒத்துக்கொள்விடைச்சொல்
எதிர்மறை வினைமுற்று தொழிற்பெயர்
.
கூட்டுவினை
|
ஆகும், ஆம்
ஆனால்
ஆம்
ஆகாது
ஆதல், ஆகுதல் (முதலியன)
ஆகவேண்டும்
|
அவுனு
கானி, அயினனு
அவுனு
காது
அவுட்ட,காவடமு (முதலியன)
காவலெனு
|
மாற்றமாடு என்னும் வினை
மாற்றம்=சொல். ஆடு என்பது ஒரு
துணைவினை
மாற்றமாடு=சொல்லாடு, உரையாடு, பேசு.
மாற்றம்-மாட்ட(தெ.).
மாற்றமாடு-மாட்டாடு(தெ.) மாத்தாடு (க.)
கள் என்னும் பன்மையீறு தெலுங்கில்
கலு-லு என்று திரியும்.
மாட்டலு
(மாற்றங்கள்)+ஆடு=மாட்டலாடு-மாட்லாடு
சில தெலுங்குச் சொற்கள் அடிப்படை
யெழுத்துகளுள் ஒன்று தொக்கு வழங்குகின்றன.
எ-டு:
அழுத்து-அத்து,
இலுப்பை-இப்பு, உருக்கு-உக்கு, கொழுப்பு கொவ்வு,
செருப்பு-செப்பு, திருத்து-தித்து, சுருட்டு-சுட்டு,
நெருப்பு-நிப்பு, பருப்பு-பப்பு, பெருத்த-பெத்த,
மருந்து மந்து, விருந்து-விந்து.
உருண்டை, ஒருத்தன் என்னுஞ் சொற்கள்
உண்டை, ஒத்தன் என்று தமிழிலும்
திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய
வடிவுகளும் வழக்கில் உள. தெலுங்கில் அங்ஙனமன்று.
சில தெலுங்குச் சொற்களின் முதலிலுள்ள
உயிர்மெய்யிடை ரகரஞ் செருகப்படும்.
எ-டு:
பொழுது-ப்ரொத்து (தெ.),
மண்டு-ம்ரண்டு (தெ.). மண்டுதல் எரிதல்.
இவ் வழக்கே, தமிழ்-த்ரமிள (வ.),
படி-ப்ரதி (வ.), பதிகம்-ப்ரதீக (வ.),
மதங்கம்-ம்ருதங்க (வ.), மெது-ம்ருது (வ.) என வடசொற்
றிரிவுகட்கு வழிவகுத்தது.
பல மென்றொடர்ச்சொற்கள்
தெலுங்கில் வல்லோசை பெறும்.
|