எ-டு :
தமிழ்
|
மராத்தி
|
தமிழ்
|
மராத்தி
|
ஏ (கு)
படி (கீழிரு) |
(யா)-ஜா
பஸ் |
இடு
இரு
|
டேவ்
ரஹ் |
யகரம் ஆரியமொழிகளிலும் ஆரியத்தன்மை யடைந்த மொழிகளி லும் ஜகரமாகத்
திரியும். இது தெலுங்கிலேயே தொடங் குவது
கவனிக்கத் தக்கது.
எ-டு:
யமன் (வ.)
யுவன் (வ.)
யௌவனம் (வ.) |
ஜமுடு (தெ.)
ஜவான் (இ.)
Juvenilis
(L.) |
மராத்திச் சொற்றொடரமைதி
சொற்றொடர்ச் சொன்முறை
தமிழிற்போன்றே மராட் டியிலும் அமைந்துள்ளது.
எ-டு:
மீ த்யாலா ஏக் ருப்பயா
திலா ஆஹே.
நான் அவனுக்கு ஓர் உருபா
கொடுத்து இருக்கிறேன்.
ஹேங் பத்ர மாஜ்யா
டேப்லாலர் டேவ்.
இந்த முடங்கலை என்
நிலைமேடைமேல் வை.
நிலைமேடை = மேசை.
ஆகு என்னும் வினைச்சொல், புணர்ப்புச்
சொல்லாகத் (copula)
தமிழிற் கருவுற்று, மலையாளத்தில் உருப்பெற்று,
மராத்தியில் திரிவுற் றிருப்பது
கவனிக்கத்தக்கது. இதனொடு, பெயர்ப்பயனிலை
புணர்ப்புச் சொற்கொண்டே முடியும் ஆரியச்
சொற்றொடரமைதி தோன்றி யிருப்பதும்
கவனிக்கத்தக்கதாம்.
எ-டு:
அது மரம் (தமிழ்)
அது மரம் ஆகுன்னு
(மலையாளம்)=அது மரமாயிருக் கிறது.
தேன் ஜாட் ஆஹே
(மராத்தி).
It is a tree
(Eng.).
பெயர்ப் பயனிலை புணர்ப்புச்சொல்
லின்றி முடியும் தமிழ்ச் சொற்றொடரமைதி,
தமிழின் இயல்பையும் முன்மையையும் தெளி
வாய்க்காட்டும்.
|