1 வேர்ச்சொற் சுவடி |
1. அர் | |
| அர் = ஒலிக் குறிப்பு. |
(a) | அரவம் = ஒலி. |
| அரா, அரவு, அரவம் = இரைவது, ஒலியறிவது, பாம்பு |
(b) | அரி = அர் என்னும் ஒலி தோன்றச் சிறிது சிறிதாய்க் கடி அல்லது தின். |
| அராவு = தேய். அரம் = அராவுவது. அரம்பம் = அராவுவது, அறுப்பது. |
| அரி = அறு. கோடு (கிளை) + அரி = கோடரி - கோடாரி - கோடாலி. |
| அரிவாள் = அரிகின்ற வாள். அரிவாள்மணை. |
| அரி = அழி. அரி = அழிப்பது, பகைவன், சிங்கம். |
| கோள் + அரி = கோளரி. |
| அரங்கு = அறுத்த அறை, இசை நாடக மேடை. |
| அரங்கம் = ஆற்றிடை அறுக்கப்பட்ட நிலம். |
| திருவரங்கம் - ஸ்ரீரங்கம். |
| அரக்கு = தேய், அழி. |
| அரக்கன் = இராட்சதன். |
| அரன் = அழிப்பவன், தேவன், சிவன். |
| அரசு = பகைவரை அழிப்பவன், வேந்தன். அரசு + அன் = அரசன். |
| அரசு = தலைமையான அல்லது தெய்வம் தங்கும் மரம். |
| அரசன் - அரைசன் - அரையன் - ராயன் - Roy |
2. அறு | |
| அர் - அறு. |
| அறு = வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு. |
| அறுவாள் = அறுக்கின்ற வாள். |
| அறவு = நீக்கம், வரையறு - வரையறவு. |
| அறுதி = முடிவு. |
| அறை = அடி, அறுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட இடம். |
| உறுப்பறை = உறுப்பறுக்கப்பட்டது. வரையறு - வரையறை. |
| அறுகு = அறுத்தறுத் தோடிப் படரும் புல். |
| அறுவை = அறுக்கும் துணி. |