பக்கம் எண் :

2தமிழ் வளம்

  அறுப்பு = பயிரை அல்லது தாலியை அறுத்தல்.
  அறுவடை = அறுப்பு.
  அற்றம் = பிறர் இல்லாத சமையம்.
3. அர்  
  அர் - அரு = அழி, குறை, நெருங்கு.
  அருகு = குறைவாகு, நெருங்கு, பக்கம்.
  அருகண்மை - அருகாமை.
  அருகன் = நெருங்கினவன், உரிமையுடையவன்
  அருகதை = உரிமை.
  அருமை = குறைவு, கூடாமை, சிறப்பு, விருப்பம்.
  அருமைவந்த - அருமந்த.
  அருந்தல் = குறைவு, விலை யுயர்வு.
  அரிது = கூடாதது, வருத்தமானது.
4. அள்  
  அர் - அள் - அண் - அடு.
(a) அள் = நெருங்கு, நெருங்கச் சேர்த்தெடு.
  அண், அண்ணு = நெருங்கு.
  அண்மு = நெருங்கு.
  அண்மை, அணுமை, அணிமை = சமீபம்.
  அணுகு = நெருங்கு.
  அண்டை = பக்கம். 7ஆம் வேற்றுமை உருபு
  அடு = நெருங்கு, அடர் = நெருங்கு. அடவி = நெருங்கின காடு,
  அடுக்கு = நெருங்கவை.
  அடுத்த = நெருங்கின, பக்கமான. இன்னொரு.
(b) அடை = அடுத்தது, அப்பம். அடை - ஆடை.
  பாலடை = பாலாடை, சங்கு.
  அடுக்கும் = நெருங்கும், தகும். 'உனக்கிது அடுக்குமா?.'
  அடங்கு = நெருங்கு, உள்ளமை.
  அடக்கு (பிற வினை).
  அடக்கம் = ஒடுக்கம், உள்ளீடு, புதைப்பு.
  அடை = நெருங்கு, சேர், பெறு.
  (ட = ய) அயல் - அசல் = பக்கம், அன்னியம்
5. அர்  
  அர் = சிவப்பு அ - இ. ர் - ல்
  அரத்தம் = செந்நீர், அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.