| | அரக்கு = சிவந்த மெழுகு. |
| | அருணன் = சிவப்பு. |
| | அருணம் = காலைச் சூரியன். |
| | அரிணம் = சிவப்பு, மான். |
| | இரத்தம் = செந்நீர். |
| | இரத்தி, இலந்தை = சிவந்த பழத்தையுடைய முட்செடி. |
| | இராகி = கேழ்வரகு. |
| 6. இ | |
| | இ - கீழுறற் குறிப்பு. |
| | இறங்கு = கீழே வா. |
| | இரு = கீழ் உட்கார், தங்கு, வாசஞ்செய். |
| | குடியிரு = வாசஞ்செய். |
| | இருப்பு = தங்கல், ரொக்கம். |
| | இருக்கை = ஆசனம். |
| | இழி = இறங்கு, கீழாகு. |
| | இளி = இழிவு. |
| 7. கில் | |
| | இ - கில். |
| (a) | கில் - கல் = தோண்டு, தோண்டுங் கருவி. |
| | கில் - கிள் - கீள் - கீழ். |
| (b) | கிள், கிள்ளு = நகத்தைக் கீழே பதி, கிள்ளுக்கீரை. |
| | கிள்ளை, கிள்ளி - கிளி = கனிகளைக் கிள்ளுவது. |
| (c) | கிழி = கீறு, துணியைக் கிழி. |
| | கிழி = முடிச்சு, துணி, படம். |
| | கீள் = கிழி. 'கீளார் கோவணம்'. |
| (d) | கீழ். கீழ்க்கு - கிழக்கு = கீழிடம், ஒரு திசை. |
| 8. இ | |
| | இ = பின்னிடற் குறிப்பு. |
| (a) | இடறு = பின்விழத் தடுக்கு. |
| | இடை = பின்னிடு, தோற்றோடு. இடக்கை = தோற்ற கை. |
| | இடம் = தோல்வி, இடர் = துன்பம். |