| யடிகள் நூல்நிலையத்தைத் தாமரைச் செல்வர் திரு. வ.சுப்பையாப்பிள்ளை அவர்கள் பல்வேறு வகையில் அரும்பெரும் பாடுபட்டு 24-8-1958 அன்று நிறுவியது எண்ணிப்பார்க்கின் இறைவன் ஏற்பாடே என்பது போதரும். |
| | "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு" | |
| (குறள் 215) |
| என்பதற்கேற்ப, உலகின் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளரும் வந்து பெரும் பயன்பெறுவதும், |
| | "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடை யான்கட் படின்" | |
| (குறள் 216) |
| என்பதற்கேற்ப, சென்னை வாணர்க்குச் சிறப்பாகப் பயன்படுவதும், |
| | "மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின்" | |
| (குறள் 217) |
| என்பதற்கேற்ப ஏனை நூல்நிலையங்கட்குச் சென்று ஏமாறிவந்தவர்க்குத் தப்பாது வேட்கை நிறைவேற்றுவதும் மறைமலையடிகள் நூல்நிலை யத்தின் தனிச் சிறப்பாகும். |
| இங்ஙனம், மறைமலையடிகள் பெயரை மட்டும் தாங்கி ஏனையர் பொத்தகங்களுங்கொண்டு எல்லார்க்கும் பொதுவாகப் பயன்படுவது மறைமலையடிகள் நூல்நிலையம் என்பதன் இரண்டாம் நிலையாகும். இனி, மறைமலையடிகள் இயற்றிய நூல்களையெல்லாம் கொண்டு விளங்குவதும் வழங்குவதும் மறைமலையடிகள் நூல் நிலையம் என்பதற்கு வேறொரு காரணமுமாகும். |
| மறைமலைநகர் என்பது போல் அடிகள் பெயரை ஒரு நிறுவனத் திற்கு இடுவதற்கு, நினைவுகூர்தல் ஒன்றே போதுமாயினும் அடிகளின் சொந்த நூலகத்தைக் கருவாகக் கொண்டதும் அடிகள் இயற்றிய நூல்களை விரிவுறுப்பாகக் கொண்டதும் கூடுதற் காரணங்களாகும். |
| மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியதற்குத் தமிழ் வளர்ச்சியும் பரவலுமே சிறப்புக் காரணமாதலின், தாமரைத் திரு. வ. சு. பிள்ளையவர்கள், அதற்குரிய முயற்சியை ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் செய்து, மேன்மேலும் பொத்தகத்தொகையைப் பெருக்கி வருவது கவனிக்கத்தக்கது. அவர், பலர் கருதுகின்றவாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்ச் சார்பான பொத்தக அல்லது நூல் வெளியீட்டாளர் மட்டுமல்லர். இதுவரை அச்சேறாத ஏட்டுச் சுவடி கையெழுத்துச் சுவடித் தொகுப்பாளரும், புதுநூல் இயற்றுவிப்பாளரும், புலவர் வெளிநாட்டுத் தமிழ்த்தொண்டர் முதலியோர் வரலாற்றுத் தொகுப்பாளரும், அவர் கையெழுத்துப்படித் தொகுப்பாளரும், அவர் உருவப்படத் தொகுப்பாளரும், பெரும்புலவர் கடிதப்போக்குவரத்துத் தொகுப்பாளரும், மாநாடுகளின் நடவடிக்கைத் தொகுப்பாளரும் நின்றுபோன பழைய செய்தித்தாள் கிழமையன், மாதிகை, காலாண்டிதழ், ஆண்டுமலர் முதலிய தொகுப்பாளரும் |