| 'மறைமலையடிகள் நூல்நிலையம்' என்பது தனியுரிமை நூல் நிலையம் என்றும் பொதுப்பயன் நூல்நிலையம் என்றும், இருநிலை கொண்டது. அடிகள் உடம்போடிருந்த காலத்தில், 'மறைமலையடிகள் நூல்நிலையம்' என்பது, பல்லவபுரத்தில் அடிகள் மாளிகையில் அடி கட்கே முழுவுரிமையானதாயிருந்தது. தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் ஏறத்தாழ நாலாயிரம் அரும்பொத்தகங்கள் கோணிநிறக் கரட்டுத்தாளால் அட்டையிடப்பட்டு, விளைந்த நெல்வயல் போலப் பதினெண் நிலைப்பேழைகளிலும் ஒரே தோற்றமாகக் காட்சி யளித்தன. |
| "என் நூலகத்தை ஓரிலக்கத்திற்கும் என் இல்லத்தை ஓரிலக்கத்திற் கும் விற்றுவிட்டு இறுதிக் காலத்தில் நாட்டுப்புறத்தில் வதிந்து அமைதி யாகக் காலங்கழிக்க விரும்புகின்றேன். திருப்பதிப் பல்கலைக்கழகத்தை என் நூலகம் வாங்குமாறு கேட்டதற்கு, அரையிலக்கந்தான் தரமுடியும் என்று சொல்லி விட்டனர்" என்று அடிகள் ஒருமுறை என்னிடம் சொன்னதுண்டு. அடிகள் நூல்நிலையம் திருப்பதி சென்றிருப்பின், திருப்பதித் திருவேங்கடமுடையார் திருக்கோவிலுக்குச் செல்பவர்க்குக் கூடப் பயன்பட்டிருப்பது அரிதே. இனி அடிகள் தங்கள் நூலகம் பொது மக்கட்குப் பயன்படுமாறு வேண்முறி (Will) எழுதிவையா திருந்தி ருப்பின் அடிகள் பொத்தகங்களெல்லாம் பழம் பொத்தகக் கடைக்காரர் வயப்பட்டுப் பல்வேறிடஞ்சென்று படிப்பவர் பார்வைக்கும் இடமின்றி மறைந்துபோயிருக்கும். |
| மறைமலையடிகள் மறைநிலை யடைந்தபின் அவர்கள் நூலகத்தை மக்கள் நிறத்தாலும் சென்னைத் தொடக்க நிலையாலும் கருநகராயிருந்த பகுதியில் ஒரு சிவத்திருக்கோவில் முன்னிலையில், இராமலிங்க அடிகள் தனிச் சொற்பொழி வாற்றிய திருமனையில் சேர்ப் பித்து மேற்கொண்டு ஐயாயிரத்தைந்நூறு அருநூல்களைச் சேர்த்துத் தமிழகத்திற்கு மட்டுமன்றி உலக முழுவதற்கும் பயன்படுமாறும், அடிகள் பெயர் உலகுள்ள அளவும் நிலவுமாறும் மறைமலை |