கீழ்நாட்டுக் கொள்கையும், வலுவிறக்கத் (Climacteric) தொடக்கம் அறுபதா மாண்டென்னும், மேனாட்டுக் கொள்கையும் கி.மு. 57-ல் தொடங்கிய விக்கிரம சகாத்தம் என்னும் அறுபானாண்டு மானத்திற்கும், அறுபானாட்டை விழாவிற்கும் கரணியமா யிருந்திருக்கலாம். | முக்கால் நூற்றாண்டிற்கும் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட எண் பான் ஆட்டை விழாவைக் கதிரிய விழா (Radium Jubilee) என்னலாம். | நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழாவை அருட்கதிர் விழா எனல் தகும். இரசிய தேசச் சாக்சியா நாட்டு சிராலி மிசிலிமோவ் (Shirali Mislimov) என்பவர் 168 ஆண்டுகளும் அவருடைய துணைவியார் பக்கு தாழி (Baku Tadzhi) என்பார் 107 ஆண்டுகளும் வாழ்ந்தனர். | | |
|
|