| 28. உர் | | | | உர் = பொருந்து. | | | உரசு = தேய், பொருந்து. | | | உராய் = தேய், பொருந்து, | | | உரிஞ், உரிஞ்சு = உரசு. | | | உரை = தேய், உரசு. | | | உரம் = புல்லும் மார்பு, வலிமை, உறுதி, எரு. | | | உரகம் = மார்பால் ஊரும் பாம்பு. உரவு = வலிமை. | | 29. உறு. | | | | உர் - உறு = பொருந்து. | | | உறுத்து = அழுத்து, வலி. உறு = வலிய | | | உறுப்பு = பொருந்தும் பாகம் | | | உறவு = பொருந்தல், கலந்து வாழ்தல். | | | உறவு + ஆடு = உறவாடு. | | | உற்றார் = பொருந்தினவர், இனத்தார் | | | உறழ் = பொருந்து, மாறுபடு. | | | உறழ்ச்சி = ஒப்பு, மாறுபாடு, விகற்பம். | | | உறை = பொருந்து, மேற்படு, தங்கு, தாக்கு, தங்கும் கூடு. | | | உறையுள்= இருப்பிடம். | | 30. ஏ. | | | | ஏ = உயர்வுக் குறிப்பு. | | | ஏண் = உயரம், பெருமை, 'ஏ பெற்றாகும்' (தொல். உரி. 8). | | | ஏண் = உயரம், ஏணி = உயரப் போக்குவது. | | | ஏணை = ஏந்துவது, தொட்டில் | | | ஏண் - சேண் = உயரம். சேணுலகம் = இந்திரனுலகு. | | | சேணோன் = இந்திரன். | | | ஏத்து = உயர்த்திப் பேசு, புகழ். | | | ஏந்து = கையுயர்த்தித் தாங்கு. | | | ஏங்கு = அடிவயிற்றினின்று காற்றையெழுப்பி மூச்சுவிடு, பெருங்கவலை கொள். | | | ஏக்கம் = பெருங்கவலை, பேராத்திரம். | | | ஏய் = ஏறு, பொருந்து, ஒத்திரு, ஏமாற்று. | | | ஏர் = எழுச்சி, அழகு,பயிரை எழச்செய்தல், உழவு, உழுகருவி. | | | ஏல் = மேலாகக் கொள், ஏற்றுக்கொள். | | | ஏழ் = எழு, ஒலி, ஓரெண். | | |
|
|