| | மகன் = படைப்பில் பெரியவன், மனிதன். |
| | மக - மா = பெரிய, மக - மகி. மகமை - மகிமை = பெருமை. |
| 26. நுள். | |
| | முள் - நுள். |
| | நுழைவு = நுணுக்கம். |
| | நுழை = இடுக்கமான வாயிலிற் புகு. |
| | நுண்மை = மிகச் சிறுமை. நுண் + பு = நுட்பு. நுட்பு + அம் = நுட்பம். |
| | நுணங்கு = நுட்பமாகு. |
| | நுணி = கூரிதாகு. |
| | "நுழைவும் நொசிவும் நுணங்கும் நுண்மை" (தொல். உரி. 78) |
| | நுணுகு = சிறிதாகு. நுணுக்கம் = நுட்பம். |
| | நொய் = நுட்பமானது, நொய்ந்து கெடு. |
| | குறுநொய் = உடைந்த அரிசி; நொய்ம்மை = நுட்பம். |
| | நொசி = நுட்பமாகு. |
| | நொசநொச = நொய்ந்துபோதற் குறிப்பு. |
| 27. உள். | |
| | உள் = உட்பக்கம். |
| (a) | உள், உள்ளம், உளம் = மனம். |
| | உள், உள்ளு = நினை. |
| | உளப்பாடு = உட்படுத்தல். |
| | உள்ளீடு = பொருளடக்கம். உட்படு = அடங்கு, இணங்கு. |
| | உட்கோள் = கருத்து. |
| | உள்ளான் உள்ளல் } = நீர்க்குள் மூழ்கும் பறவை. |
| | உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம். |
| | ஈர + உள்ளி = ஈருள்ளி. |
| | உளவு = உள்ளிருந்தாராய்தல், துப்பு. |
| (b) | உண் = உட் செலுத்து, சாப்பிடு. உட்கொள் = சாப்பிடு. |
| | உறிஞ்சு = உள்ளிழு. |
| (c) | உள்கு - உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கு, அச்சம். |
| | உட்கு + ஆர் = உட்கார். அச்சத்தாற் குந்து, குந்து, இரு. |
| | உட்கி - உக்கி = அச்சத்தாற் குந்திச் செய்யும் கரணம். |
| (d) | உண்மை = உள்ளிருத்தல், இருத்தல், மெய். |
| | உள் + து = உண்டு. உள் + அது = உள்ளது. உண்டு + ஆகு = உண்டாகு. |
| (e) | உ - ஒ; ஒல்கு = ஒடுங்கு, தளர். ஒற்கு + அம் = ஒற்கம் = தளர்ச்சி. |
| | ஒல்லி = ஒடுங்கிய, மெல்லிய |
| | ஒடுங்கு = நெருக்கமாகு, ஒல்லியாகு. |