| 22. முகு | |
| | முகம் = தலையின் முன்பக்கம், முன்பக்கம். |
| | முகர் = முகம், முக வுருவமுள்ள முத்திரை. |
| | முகரா = ஒரு நாணயம் |
| | முகரை = முகம். |
| | திருமுகம் = முத்திரையுள்ள கடிதம். |
| | முகத்திரை = முத்திரை. முகத்திரம் = மோதிரம். |
| | முகம் - முகன் - முகனை - மோனை = சீரின் முன்னெழுத்து. |
| | முகப்பு = முன்பக்கம். துறைமுகம் = நிலத்தின் முன்பக்கமான நெய்தல் நகர். |
| | முகம் - நுகம். |
| | முகம் = முன்புறம், பக்கம். |
| (b) | முகிழ் = முன்தோன்றும் அரும்பு, குவி, தோன்று. |
| | முகை = அரும்பு. |
| | உ - ஒ. மொக்குள் = அரும்பு. |
| 23. முகு | |
| | முகம் = முன்னால் நீண்டிருக்கும் மூக்கு. |
| | முகடு = மூக்குப் போன்ற கூரை. |
| | முகட்டுப் பூச்சி - மூட்டைப் பூச்சி - மூட்டை. |
| | முகடி = முகட்டுத்தரத்தில் இருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி. |
| | முகடி = முகரி. |
| | முகடு = மலை முதுகு. |
| | முக்கு = தெரு மூலை, மூக்குப் போன்ற சந்து. |
| | முக்கை = ஆறு திரும்பும் மூலை. |
| | மூக்கு = முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு, மூக்குப்போல் நீண்டு கூரியது. |
| 24. முகு. | |
| | முகர் = மூக்கால் மணத்தை அறி. |
| | முகர் - நுகர் = மணத்தையறி, இன்புறு. |
| | முக = மணத்தையறி, விரும்பு. |
| | முக - மோ = விரும்பு, காதல்கொள். மோ + கம் = மோகம். |
| | மோகம் - மோகி. மோகினி = காதலூட்டிக் கொல்லும் பெண்பேய். |
| 25. முகு. | |
| | முகம் = முதல் |
| | முகமை - முகாமை = தலைமை |
| | முக்கியம் = தலைமையானது, சிறந்தது. |
| | முகம்-மகம், மகமை=தலைமை, ஊர்த்தலைவனுக்குக் கொடுக்கும் வரி. |