27 கேள்விச் செல்வம் | கிருட்டிணசாமி, சென்னப்பநாயக்கன் பாளையம். | *சொல்லுக்கு 'நடுவில்' 'ர' முதல் 'ரௌ' ஈறாக உள்ள எழுத்துக்கள் வருமா? 'ர' முதல் 'ரௌ' ஈறாகவுள்ள உயிர் மெய்யெழுத்துக்களுள், ர, ரா, ரி, ரு, ரை, ரோ என்பவை தனிச் சொல்லிடையாக வரும். | பாலகிருட்டிணன், மதுரை-1. | * தமிழ் மொழியினின்று ஏனைய தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பிரிந்திருப்பின் அவற்றுக்குத் தமிழ் எழுத்தின்றி மற்றோர் எழுத்து முறை வந்தது எப்படி? தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகள் தமிழில் அல்லாத வல்லொலிகளைப் பெற்றதனாலும், ஆரியச் சேர்க்கைகளாலும், ஆரியமுறை யொட்டிய நெடுங்கணக்கைக் கொண்டன. * தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், இன்றைய பொருளியல் நிலையில் செழிப்போடு வாழ முடியுமா? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தழைத்தோங்குவதற்குரிய செழுமைக ளெல்லாம் அதற்கிருக்கின்றன. பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் பிற்காலத்தில் நாயக்க மராட்டிய அரசுகளும், தனித்து வாழ்ந்திருக்க, சோழ பாண்டி நாடுகள் இணைந்த பகுதி இனி ஏன் தனித்து வாழமுடியாது? இக் காலத்தில் இரசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு முதலிய சில நாடுகள் தவிர ஏனையவெல்லாம் பெரும்பாலும் மேனாடுகளின் துணைகொண்டே வாழ்வனவாகும். இந்தியா மேலைத் துணை கொண்டு வாழ்வது போன்றே தமிழ்நாடும் மேலைத் துணை கொண்டு வளம்பெற வாழும். | கா. இர. பகலவன், சென்னை. | * அகத்தியர் தமிழரா? வடமொழியாளரா? அகத்தியம் தொல் காப்பியத்திற்கு முந்தியதா? முதன் முதலில் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அகத்தியரா? | அகத்தியர் ஆரியர். அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முந்தியது. அகத்தியர் காலம் ஏறத்தாழ கி. மு. 1500. தமிழுக்கு முதலிலக்கணம் வரைந்த | | |
|
|