| அம் + காளம் (காளி) + அம்மை = அங்காளம்மை. |
| காளான் = கருங்காளான். |
| காளை = கரிய எருது, எருது. |
(c) | கள் - கர = மறை. |
| கரவு = கபடம், களவு. |
49. கண். | |
| கள் - கண். = கருப்பான விழி. |
(a) | கண் = விழி, கண் போன்றது, 7ஆம் வேற்றுமை உருபு |
| கண்ணு = மனதால் பார், கருது. |
| கண்ணியம் = மதிப்பு. |
| கண்வாய் = சிறு வாய்க்கால். |
| கண்ணாளன், கண்ணவன், கணவன் = மனைவிக்குக் கண் போன்றவன். |
| கண்ணி = கண் கண்ணாய்க் கட்டிய மாலை. |
| கணு = கண் போன்ற வரையிடம். |
(b) | கணி = அளவிடு. கணியன் = கணிப்பவன், சோதிடன். |
| கணிதம் = கணக்கு. கணக்கு + அன் = கணக்கன், கணக்கப் பிள்ளை. |
| கணக்கு = வரவு செலவுக் குறிப்பு. |
| கணி - குணி = அளவிடு. |
(c) | கண் - காண் = பார். காட்சி = அறிவு. |
| காணி = மேற்பார், மேற்பார்க்கும் நிலம், பிரிவு. |
| காணம் = மேற்பார்வை, மேற்பார்வை நிலம், பிரிவு. |
| கண்காணம் = மேற்பார்வை. கண்காணி = மேற்பார்ப்பவன். |
| கண்காணியார் = அத்தியட்சர். |
| மா + காணி = மாகாணி, மா + காணம் = மாகாணம். |
50. கரு. | |
| கள் - கரு = கருப்பாகு. |
(a) | கருப்பு = கருமை, பஞ்சம், பேய். |
| கருகு = கருப்பாகு, தீந்துபோ. |
| கருக்கு = கஷாயம், பனைமட்டையின் கரிய ஓரம், கூர். |
| கருகல் = பொருள் விளங்காமை. |
| கரும்பு = கரிய தண்டுள்ள தட்டை. |
| கருநாடகம் - கருநடம் - கன்னடம் = ஒரு நாடு, ஒரு மொழி. |
(b) | கரம்பு = கருமண். கரம்பை = காய்ந்த களிமண், ஒரு பயறு. |
(c) | கரி = அடுப்புக் கரி, யானை. |
| கரிசல் = கரிய நிலம், |