பக்கம் எண் :

18தமிழ் வளம்

  கரிச்சான் = கரிக்குருவி. காரி = கரிய.
  கரியன் = திருமால், கண்ணன்.
(d) கரு - கறு.
  கறு = கருப்பாகு, முகங்கரு, "காபி.
  கறுவு = "காபம், வர்மம், கறம் = வர்மம்.
51. கல.  
  கல = கூடு.
(a) கலப்பு = "சர்ப்பு, கலப்படம் = இழிகலவ.
  கலவை = கலப்பு, கலம்பகம் = பலவுறுப்புகள் கலந்த பனுவல்.
  கலம்பகம் - கலம்பம் = கலவை.
  கலவி = புணர்ச்சி.
(b) கலகம் = சண்டை. கலாபம் = கலகம், சண்டை.போன்றவன்.
  கலாம் = சண்டை.
(c) கலங்கு = பல பொருள் கூடு, மயங்கு.
  கலக்கம் = மயக்கம்.
52. குள்.  
  குள்ளம், குள்ளல், குள்ளை = குறுமை.
(a) குஞ்சு, குஞ்சி = பறவைப் பிள்ளை.
  குச்சு, குச்சி = சிறு கம்பு.
  குட்டி = சிறியது, பிள்ளை. குருளை = குட்டி.
  குட்டை, குண்டு = சிறு குளம்; குழி = சிறு வளை.
  குட்டை - கட்டை = குறுகியது.
  குக்கல் = குள்ளநாய்.
  குன்று = குறை, சிறுமலை. குன்றி = சிறு முத்து.
  குன்று + அம் = குன்றம்.
(b) குறு - குறள் = குறு மானுடம், குறு வெண்பா.
  குறளி = குறும் பேய்.
  குறுகு = சிறு, குட்டையாகு.
  குறுக்கு = குறுகிய வழி, ஊடு, நடுமுதுகு.
  குறை = தன்மை குறைந்தது. குற்றம் = குணக் குறைவு.
  குற்றி - குச்சி = துரும்பு. குறு + இல் = குற்றில் - குச்சில்
  குறும்பு = குறுமலை, குறுமலையரசன், அவன்செய்யும் சேட்டை, சேட்டை.
  குறுமகன் - குறுமான் = சிறுவன்.
  கூழல் = குறுகியது.
  கூழி = குறும்பசு.
  கூழை = குறுகிய முடி.