53. கும் | |
| கும் = குவி, திரள். |
| கும் + அல் = கும்மல். கும்மி = கை குவித்தாடும் ஆட்டம் |
| கும் + அர் = குமர். குமர் + இ = குமரி. |
| குமர் + அன் = குமரன். குமரன் - குமாரன். |
| குமிழ், குமிழி = குவித்த நுரை, குவிந்த கட்டி. |
| குமிழ் - சிமிழ் - திமில். |
| குமி + அல் = குமியல், குமி - குவி. |
| குவி - குவியல், குவால், குவவு. |
| குவை = குவியல், திரட்சி. குவை - குகை. |
| குப்பு - குப்பல் = குவியல். |
| குப்புறு = குவி, தலைகீழாகு. |
| குப்பி = குவிந்த மூடி. குப்பை = குவியல், தூசிக்குவியல். |
| குப்பம் = குப்பைக்காட்டு ஊர். |
| குப்பன் = பட்டிக் காட்டான். |
| கும்பு = குவி, கூடு, குவிய வேகு. கும்பல் = கூட்டம். |
| கும்பி = குவிந்த வயிறு. |
| கும்பிடு = கைகுவி. |
| கும்பம் = குவிந்த குடம். கும்பா = குவிந்த பாத்திரம். |
| கூம்பு = குவி, பாய்மரம். கூப்பு = கை குவி. |
| கொம்மை = திரட்சி. |
54. கொள். | |
| கொள் = வாங்கு, பெறு, பிடி, மிகுதியாயெடு. |
| கொள்வனை = பெண் கொள்ளல். |
| கொள்ளை = சூறை, விலை. |
| கொண்டி = கொள்ளை, மாட்டும் கொடுக்கு. |
| கொள்ளி = நெருப்புப் பிடித்த கட்டை, நெருப்பு. |
| கொளு = பொருட் குறிப்பு. |
| கொளுவு = பொருத்து, மாட்டு. |
| கொளுத்து = பற்றவை, பொருத்து, புகட்டு |
| கொளை = பண்ணமைத்தல் |
| கொள் - கோள் = கொள்ளுதல், கொல்லுதல், பிடித்தல், பெறுதல், கருத்து, கொள்கை, தீது சொல்லல். |
| கோளாறு = கொள்ளும் வழி, செப்பஞ் செய்யும்நிலை, பழுது. |
| கோளி = கொல்லும் பேயுள்ள மரம், கொள்வோன். |