| பாகு - பாகம். பாக்கம் = பக்கம், ஊர்ப்பகுதி. |
| பாகு - பாங்கு - பாங்கர். பாங்கு = பக்கம், தன்மை. |
| பாங்கு + அன் = பாங்கன். |
(b) | பகு - பா. பாத்தி = பகுக்கப்பட்ட செய்ப் பாகம். பாதீடு = பகுத்தல். |
(c) | பகு - வகு. வகு + ஐ = வகை. வகு + பு = வகுப்பு. |
(d) | பகிர் - வகிர். |
67. பெள் | |
| பெள் = விரும்பு, காதலி. |
| பெட்பு = விருப்பம். |
| பெள் - பெண் = விரும்பப்படும் பால். |
| பெள் + தை = பெட்டை - பெடை - பேடை - பேடு |
| பேடு + அன் = பேடன் = ஆண்டன்மையுள்ள பெண். |
| பேடு + இ = பேடி = பெண்டன்மையுள்ள ஆண். |
| பெண் - பிணா - பிணவு - பிணவல். பிணா - பிணை. |
| பெண் - பேண் = விரும்பு, விரும்பிப் பாதுகா. |
68. பொள் | |
| பொள் = துளையிடு. |
| பொண்டான் = எலி பொத்துக் கிளம்பும் வளை. |
(a) | பொளி = வெட்டு, வரப்பு. |
| பொள் - பொல். |
| பொல் + அம் = பொல்லம் = ஒட்டை. |
| பொள்ளாப் பிள்ளையார் = பொல்லாப் பிள்ளையார். |
| பொக்கு = துளையுள்ளது, உள்ளீடற்ற தானியம், பொய் |
| பொக்குவாய் = பல்லற்ற வாய் |
| பொக்கு + அணம் = பொக்கணம் = பை. |
| பொய் = உள்ளீடற்றது, மெய்யல்லாதது. |
| பொ = துளையிடு. பொத்தல் = துளை. |
| பொள் - போழ் = பிள, வெட்டு. |
| பொழில் = வெட்டப்படுவது, சோலை. |
(b) | போழ் = வெட்டு, துண்டு. போழ்து = இருளைப் பிளக்கும் சூரியன். |
| போழ்து - பொழுது - போது = வேளை. |
69. போ | |
(a) | போ = செல். போது = போ. போகு = போ. |
| போக்கு = செல்லல், ஆதரவு. |
| போக்கு - போங்கு = போகும் முறை, மாதிரி. |