பக்கம் எண் :

24தமிழ் வளம்

(b) போதும் = செல்லும், வேண்டிய அளவாகும்.
  போதிய, போந்த = அளவான, போதுமான.
  போகு = நீள்.
  போது = விரிந்த அரும்பு.
  போந்தை = விரிந்த பனை ஓலை.
  போந்தை - பொத்தகம் - புத்தகம்.
70. வள்  
  வள் = வளை.
  வள்ளம் = வட்டக் கலம்.
  வளாகம் = சூழ்ந்த இடம், வளார் = வளைந்த பிரம்பு.
  வளை = வளையல், வளைந்த சங்கு, வளைந்த உத்தரம், வட்டத் துவாரம்.
  வளை + அல் = வளையல், வளை + வி = வளைவி.
  வளை + அம் = வளையம்.
  வட்டம் = வளையம், வட்டக்காசு, வட்டி, பகுதி.
  வட்டி = வட்டக்காசு, கடனுக்குச் செலுத்தும் காசு, வளைந்த பெட்டி.
  வட்டில் = வட்டக் கலம்.
  வட்டு = வட்டமான சில்.
  வட்டகை, வட்டாரம் = இடப்பகுதி.
  வணங்கு = உடம்பு வளை.
  வழங்கு = வளைந்து கொடு
  வணர் = வளைந்த யாழுறுப்பு.
  வணங்கு - வாங்கு - வங்கு. வங்கி = வளைந்தது.
  வண்டி = வட்டச் சக்கரம், சக்கரத்தையுடைய சகடம்.
  வண்டு = வளையல், வட்டமான வண்டு.
  வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில்.
  பாண்டி = வட்டாடல். பாண்டில் = வட்டக் கிண்ணம், உருட்சியான எருது.
  பாண்டியன் = வீரன்.
  வளி = வளைந்து வீசும் காற்று.
  வாளி = வளையம், வளைந்த பிடி, வளைந்துவிழும் அம்பு
  வாணம் = வளையும் வெடிவகை. வாணம் - பாணம் = அம்பு.
71. வெள்  
  வெள் = வெள்ளையாகு.
  வெளி = வெள்ளையான இடம். வெட்ட = வெள்ளையான.
  வெள்ளாளன் = வெண்களமன்.
  வெள்ளாட்டி = வெள்ளாளப்பெண், வேலைக்காரி.
  வெள்ளரி = வெண்கோடுள்ள காய்.