பக்கம் எண் :

26தமிழ் வளம்

2
போலிகை யுருப்படிகள்
1. அ (எழுத்தும் சொல்லும் சொல்லுறுப்பும் குறியும்)
1. எழுத்து  
அ1 a. பெ. n. தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து; first letter of the Tamil alphabet.
வகை. உயிர்க்குறில் : short vowel.
சொல்வகை : அங்காத்தலால் ஒரு மாத்திரை யளவொலிக்கும் வேற்றுமைப்பாடு. 2ஆம் வகை, 3ஆம் பிரிவு. எ-டு : அவ்வை, அவ்வால், அவ்விற்கு, அவ்வின், அவ்வது, அவ்வில்.
2. சொல்  
அ2 a. பெ; n. 1 அழகு; beauty. "அவ்வாய் வளர்பிறை சூடி" (பெரும் பாண். 412), 2. சிவன், Siva. "ஆரு மறியா ரகார மவனென்று" (திருமந். 1751). 3. திருமால் Vishnu "அவ்வென் சொற்பொருளாவான்" (பாகவ. சிசுபா. 20). 4. நான்முகன், Brahma. (தக்க யாகப். 65, உரை), 5. சுக்கு; dried ginger (பரி. அக.) 6. திப்பிலி; long pepper. (பரி. அக.)
a. பெ. எ; adj. புறச்சுட்டு: demon. prefix: அ = அந்த. 1. சேய்மைச் சுட்டு; pref. to nouns, expressing remoteness. எ-டு: அப் பையன். 2. முற்பெயர்ச் சுட்டு; pref. to nouns, referring to their antecedents. எ-டு : பண்டைத் தமிழகத்தை ஆண்டவர் சேர சோழ பாண்டியர். அம் மூவேந்தரும் இன்றில்லை. 3. உலகறி சுட்டு; pref. expressing world-wide eminence. 'அத்தம் பெருமான்' (சீவக. 221)
அ3

3.சொல்லுறுப்பு (இ; ind)

அ4 a, அகச்சுட்டு: demon. base : முதனிலை - 1. சேய்மைச் சுட்டு; base of the dem. pron. expressing the remote person or thing.