இணைமொழி: |
அவரை துவரை. |
சிறப்புக் குறிப்பு |
| "அவரை கொய்யுந ரார மாந்தும்" "சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு" | (புறம். 215: 5). |
(புறம். 335:5) |
என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, மொச்சையும் அவரை யெனப் பட்டதென்றோ, கருத இடந்தரும். |
கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்தி ருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை. |
சீர்திருத்தம்: |
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி, கோழியவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது. |
ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெற வில்லை. |
மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர். |
3. இஞ்சி |
சொல் : இஞ்சி |
வழக்கிடம் : இஞ்சி1 - இலக்கியம் இஞ்சி2 - தமிழகம் |
சொல்வகை : பெயர்ச்சொல் |
இஞ்சி1 = கட்டிட வடிவான இடப்பெயர் இஞ்சி2 = அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். |
வேற்றுமைப்பாட்டு வகை. |
முதல்வகை (சாரியை யில்லது), எ-டு: இஞ்சியை, இஞ்சியால், இஞ்சிக்கு, இஞ்சியின், இஞ்சியது, இஞ்சியில். |
இயல் விளக்கம் |
இஞ்சி1 - செம்புருக்கிச் சாந்தாக வார்த்து இறுகக் கட்டிய திண் ணிய கோட்டை மதில் வகை. |
இஞ்சி2 - பித்தத்தைப் போக்குவதும், மருந்துகளிலும் கறிவகை களிலும் பெரும்பாலும் கூட்டுச் சரக்காகச் சேர்க்கப்படுவதும், கார்ப்புச் சுவையுள்ளதுமான, கிழங்குள்ள பூண்டுவகை. |