பக்கம் எண் :

36தமிழ் வளம்

வீட்டவரைக்கும் காட்டவரைக்கும் வேறுபாடு.

  வீட்டவரை காட்டவரை

(1)

வீட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது காட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது.
 

(2)

கொடியாகப் படர்வது குத்துச் செடியாக வளர்வது.

(3)

இளங்காய் கறியாகச்  சமைக்கப்படுவது முற்றிய காய் அவித்துத் தின்னப்படுவது.

(4)

தோல் மெல்லியது தோல் வல்லியது.
     (3) அயல்நாட்டு (சீமை) அவரை = மருதங்காய் போன்ற வடிவுள்ளதும் நீண்டதுமான வெளிநாட்டுக் காய்வகை; a kind of foreign vegetable. அயல் நாட்டை அல்லது மேல் நாட்டைப் பொது மக்கள் 'சீமை' என்னும் வடசொல்லாற் குறிப்பர். இங்கு வடசொல் என்றது வடநாட்டுச் சொல்லை.
     (4) சீனியவரை - கொத்தவரை - குத்தவரை = கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்வகை; a species of pulse whose fruits are in bunches.
     (5) சுடலையவரை = சுடுகாட்டுப் பக்கத்தில் இயற்கையாக விளைவதும், சீனியவரை போன்றதும், உண்ணப் படாததுமான காய் வகை; a species of inedible bean growing wildly near burial or burning grounds. இது பேயவரை யெனவும் படும்.
     (6) பாடவரை - வாளவரை - தம்பட்டவரை - சாட்டவரை = வாள்போல் நீண்டு பட்டையாக விருக்கும் காய்வகை; sword-bean, canavalia ensiformis.
இனச்சொல்:
  அவரை தெ(லுங்கு)  - சிக்குடு,
    க(ன்னடம்)  - அவர, அவரி, ஆவரே, அமரே;
    ம(லையாளம்)  - அவர, அமர;
    கோ(த்தம்)  - அவர்
    துட(வம்)  - எவிர் (f);
    து(ளுவம்) - அவரெ, அபரெ, lablab vulgaris
அவடெ. அபடெ. ஆவடெ (a kind of bean)
   
     அவரைக் காய் என்பது மலையாளத்தில் அவரக்க எனத் திரிந்துள்ளது. அமரக்க என்பது அவரக்க என்பதன் திரிவு.
     துளுச் சொற்களுள் ரகரமுள்ளவை ஒருவகையையும் டகரமுள் ளவை மற்றொரு வகையையும் குறிப்பனவாகப் பரோ எமனோ திரவிட அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் துளு அகரமுதலியில் அங்ஙனங் குறிக்கப்படவில்லை.