பாத மூலம் = பெ. 1. குதிகால் heel, (யாழ் அக.) 2. வீடு பேற் றிற்குக் கரணியமானதும் (காரணமானதும்) அடைக்கலமாகக் கருதப்படு வதுமான திருவடி; feet of a deity or saint considered as the source of bliss and a refuge. "நினையுமின் பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம்" (சீவக. 511). |
பாத வெடிப்பு = பெ. பித்த வெடிப்பு; fissure-foot |
பாதம் - பாதை = பெ. 1. ஒற்றையடி வழி; foot-path. beaten track. 2. வழி, way, path, road (பி.ங்.). 3. முறை way, method, mode, manner. |
பதி - வதி, செ. குன்றிய வி. |
வதிகிறேன் (நி கா.), வதிந்தேன் (இ. கா.), வதிவேன் (எ. கா.) |
வதி - தல் = (செ. குன்றிய வி.) 1. தங்குதல், குடியிருத்தல், to slay, to dwell, abide; to sojourn. "வதிமண் வம்பலர் வாயவிழ்ந் தன்னார்" (பரிபா. 10:20). 2. துயிலுதல், to sleep "ஆற்றா ணினையுநள் வதிந்தக் கால்" (கலித். 126). |
வதி = பெ. 1. விலங்கு பறவை முதலியன தங்குமிடம்; lair, nest. "மாவதி சேர" (கலித். 119). 2. கால் பதியுஞ் சேறு, mire. "செங்கயல் வதிக்குதி கொளும் புனலது" (தேவா. 413:7), (பிங்). |
கூட்டுச் சொல்: (Compound words) |
| பதிபடை = பெ. மறைந்து நிற்குஞ் சேனை. army lying in ambush (W.). |
| பதிபடை - பதிப்படை. "பெரிய திருவடியைப் பதிப்படையாக வைத்து வந்து" (திவ். திருநெடுந். 23, வியா. பக். 213). |
| பதி மினுக்கி = பெ. (இடத்தைத் துலக்கும்) துடைப்பம்; broom, as cleaning a place. (தைலவ. தைல.) |
| பதியஞ் சருக்கரை = பெ. ஒட்டும் பதத்திலுள்ள சருக்கரை; molasses in a viscous condition (நாஞ்.). |
| பதியரி = பெ. நாற்று. saplings for transplanting (அக. நி.). |
பதியெழு - தல் = (செ. குன்றிய வி.) வலசை போதல்; to flee from home or town from fear of the kind or a hostile army. |
பதியெழவு, பதியெழுவு = பெ. வலசைபோகை; flight from home or town from fear of the kind or a hostile army. "பதியெழ வறியாப் பழங்குடி" (மலைபடு. 479). "பதியெழு வறியாப் பழங்குடி" (சிலப். 1:15). |
பதிவாளர், பெ. 1. ஆவணம், ஒப்பந்தம், சட்டதிட்டம் முதலியவற்றைப் பதிவு செய்யும் அரசியல் அலுவலர். Registrar of title-deeds, contracts, rules and regulations of corporations etc. (இக்கால வழக்கு). 2. பல்கலைக்கழக அலுவலகத் தலைவர்; Registrar of a University (இ. வ). |
பதிவிடம் = பெ. ஒளித்திருக்குமிடம்; hiding place, ambush. |
பதிவிளக்கு = பெ. பேயோட்டுதற்காகக் குடத்தின் மேற் பதியவைத்த விளக்கு; lamp fixed on a pot while exorcizing devils (W.). |