பக்கம் எண் :

48தமிழ் வளம்

     பதிவுச் சாப்பாடு = பெ. உண்டிச்சாலையில் மாதக் கணக்காக ஏற்பாடு செய்து உண்ணும் உணவு; regular boarding at a hotel or mess on monthly account.

     பதிவேடு = பெ. கணக்குப் பதியும் பொத்தகம்; register, account-book, ledger.

மரபு வழக்கு: (Idioms)

     பதிபோடு1 - தல் = (செ. குன்றா வி.) 1. நாற்று நடுதல், to transplant. 2. பதியம் போடுதல்; to plant, as slips; to insert, as grafts.

     பதிபோடு2-தல் = (செ. குன்றிய வி.) பதுங்குதல், to crouch. புலி பதி போடுகிறது. (உ. வ.).

     பதிவிரு-த்தல் = (செ. குன்றிய வி.) ஒளித்திருத்தல்; to lie in a wait, as a thief or an ememy; to lurk, as a beast ready to spring.

     பதிவுவை-த்தல் = (செ. குன்றா வி.) 1. கணக்கிற் பதிதல்; to enter in a an account. 2. வாடிக்கை வைத்தல்; to become in customer of a shop.

     பதிவை-த்தல் = (செ. குன்றா வி.) பதிபோடு2 என்பதைப் பார்க்க.

பிற வினை (Casual verb) - 15ஆம் புடைபெயர்ச்சி.

     பதிக்கிறேன் (நி.கா.), பதித்தேன் (இ.கா.), பதிப்பேன் (எ.கா.).

     பதி-த்தல் = (செ. குன்றா வி.) 1. அழுத்துதல், to imprint, impress, stamp, engrave, as in mind; to plunge. "பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி" (திருவாச. 11:12). 2. மணி முதலியன இழைத்தல்; to infix, insert, ingraft, inlay, as gems; to enchase. 3. கற் பாவுதல்; to pave, as floor with bricks or stones. 4. தாழ்த்துதல், to lower height, price, etc; to set lower, insert deeper. 5. பதியம் போடுதல்; to plant a custer of saplings temporarily in mud; to plant a shoot, runner or creeper. 6. அச் சிடுதல், to print, reprint, edit. 7. எழுதுதல் to inter in a register. 8. அதி காரங் கொடுத்தல்; to invest with power, authority or prerogative (W.)

தொழிற் பெயர்: (verbal noun)

     பதித்தல், பதிக்கை, பதிப்பு.

தொழிலாகு பெயர்: (metorymical verbal noun)

     பதிப்பு = பெ. edition

கூட்டுச் சொல் (compound words)

    

பதி சித்திரம் = பெ. கோபுரப் படிமை; images adorning a temple tower. (கோயிலொ. 122.).

 

பதிப்பகம் = பெ. 1. அச்சகம், printing press. 2. வெளியீட்டகம், publishing house.

 

பதிப்பாசிரியர் = பெ. editor.

 

பதிப்பாளர் = பதிப்பாசிரியர்.